திருக்குறள் 1173: கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் — இதுநகத் தக்க துடைத்து.

Thirukkural Verse 1173

திருக்குறள் 1173 — கண் விதுப்பழிதல் (Eyes consumed with Grief), காமத்துப்பால்.

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்

இதுநகத் தக்க துடைத்து.

கலைஞர் உரை

தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்

மு. வரதராசன் உரை

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

சாலமன் பாப்பையா உரை

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தாம் கதுமென நோக்கித் தாமே கலுழும் இது - இக்கண்கள் அன்று காதலரைத் தாமே விரைந்து நோக்கி இன்றும் தாமே இருந்தழுகின்ற இது; நகத்தக்கது உடைத்து - நம்மால் சிரிக்கத்தக்க இயல்பினை உடைத்து. ('கண்கள்' என்பது அதிகாரத்தான் வந்தது. 'இது' என்றது மேற்கூறிய கழிமடச் செய்கையை. அது வருமுன்னர்க் காப்பார்க்கு நகை விளைவிக்கும் ஆகலான் 'நகத்தக்கது உடைத்து' என்றாள்.)

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: இக்கண்கள் அன்று விரைந்து தாமேநோக்கி இன்று தாமே கலுழாநின்ற; இது சிரிக்கத்தக்க துடைத்து. இஃது ஆற்றாமை மிகுதியால் நகுதல் மிக்க தலைமகளை இந்நகுதற்குக் காரண மென்னையென்று வினாவிய தோழிக்கு அவள் கூறியது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: இக்கண்கள் அன்று காதலரைத்தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்ற தன்மை நம்மால் சிரிக்கத் தக்கதாக இருக்கின்றது.

Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum

Ithunakath Thakka Thutaiththu

Couplet

The eyes that threw such eager glances round erewhileAre weeping now. Such folly surely claims a smile

Translation

Eyes darted eager glance that day It's funny that they weep today

Explanation

They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?

Comments (2)

Rasha Ram
Rasha Ram
rasha ram verified

1 year ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Umang Ramanathan
Umang Ramanathan
umang ramanathan verified

1 year ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

துப்புர வில்லார் துவரத் துறவாமை

உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Thuppura Villaar Thuvarath Thuravaamai

Uppirkum Kaatikkum Kootru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.