திருக்குறள் 1175: படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் — காமநோய் செய்தஎன் கண்.

Thirukkural Verse 1175

திருக்குறள் 1175 — கண் விதுப்பழிதல் (Eyes consumed with Grief), காமத்துப்பால்.

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்

காமநோய் செய்தஎன் கண்.

கலைஞர் உரை

கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன

மு. வரதராசன் உரை

அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

சாலமன் பாப்பையா உரை

கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) கடல் ஆற்றா காமநோய் செய்த என்கண்- எனக்குக் கடலும் சிறிதாம் வண்ணம் பெரியதாய காம நோயைச் செய்த என் கண்கள்; படல் ஆற்றா பைதல் உழக்கும் -அத் தீவினையால் தாமும் துயில்கிலவாய்த் துன்பத்தையும் உழவாநின்றன. (காமநோய் காட்சியான் வந்ததாகவின், அதனைக் கண்களே செய்ததாக்கிக் கூறினாள். துன்பம் அழுதலானாயது)

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: கடலினும் மிக்க காமநோயை என்மாட்டு நிறுத்துதலானே கண்கள் தாம் உறங்கமாட்டாவாய்த் துன்பமுறாநின்றன. இது பிறர்க்கு இன்னாமை செய்தார்க்கு இன்னாமை வந்ததென்று தோழிக்குத் தலைமகள் கூறியது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: கடலும் சிறிதாகி விடுமாறு பெரிதாகிய காம நோயினைச் செய்துவிட்ட எனது கண்கள் அத்தீமையான செயலால் தூக்கம் வராமல் துன்பத்தில் உழலுகின்றன.

Patalaatraa Paidhal Uzhakkum Katalaatraak

Kaamanoi Seydhaen Kan

Couplet

The eye that wrought me more than sea could hold of woes,Is suffering pangs that banish all repose

Translation

My eyes causing lust more than sea Suffer that torture sleeplessly

Explanation

Mine eyes have caused me a lust that is greater than the sea and (they themselves) endure the torture of sleeplessness

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்

கேளாது நட்டார் செயின்.

Vizhaidhakaiyaan Venti Iruppar Kezhudhakaiyaar

Kelaadhu Nattaar Seyin

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.