செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் — தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. | குறள் எண் - 1275

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.
கலைஞர் உரை
வண்ணமிகு வளையல்கள் அணிந்த என் வடிவழகியின் குறும்புத்தனமான பார்வையில், என்னைத் துளைத்தெடுக்கும் துன்பத்தைத் தீர்க்கும் மருந்தும் இருக்கிறது
மு. வரதராசன் உரை
காதலி என்னை நோக்கி செய்து விட்டுச் சென்ற கள்ளமான குறிப்பு, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை
நெருங்கி வளையல்களை அணிந்த என் மனைவி நான் மட்டுமே அறிய மறைத்துக் காட்டும் ஒரு குறிப்பில் என் பெருங்கவலையைத் தீர்க்கும் மருந்து ஒன்றும் உண்டு.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாததொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - என் மிக்க துயரைத் தீர்க்கும் மருந்தாவதொன்றனை உடைத்து. (உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிபபுத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து - அப்பிரிவின்மை தோழியால் தெளிவித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்' என்பதாம்.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்ற களவு நீ உற்றதொரு துன்பத்தைத் தீர்ப்பதொரு மருந்தாதலை உடைத்து. தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியுள் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச்செல் லென்று தோழி கூறியது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நெருங்கிய வளையல்களையுடைய இப்பெண்ணின் மனதிற்கொண்டு எனக்கு மறைத்து வைத்திருக்கின்ற குறிப்பு, எனது மிகுதியான துன்பத்தினைத் தீர்க்கின்ற மருந்தொன்றினையுடையது.
Seridhoti Seydhirandha Kallam Urudhuyar
Theerkkum Marundhondru Utaiththu
Couplet
The secret wiles of her with thronging armlets decked,Are medicines by which my raising grief is checked
Translation
The close-bangled belle's hidden thought Has a cure for my troubled heart She to Her Maid
Explanation
The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow
Comments (3)

Stuvan Kala
4 weeks ago
What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

Indrajit Wali
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
Nerunal Ulanoruvan Indrillai Ennum
Perumai Utaiththuiv Vulaku
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Saanvi Cheema
4 weeks ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.