எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார் — நினைப்ப வருவதொன்று ஏல். | குறள் எண் - 1202

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
எனைத்தொனறு இனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல்.
கலைஞர் உரை
விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்
மு. வரதராசன் உரை
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
சாலமன் பாப்பையா உரை
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தாம் வீழ்வார் நினைப்ப வருவது ஒன்று இல் - தம்மால் விரும்பப் படுவாரைப் பிரிவின்கண் நினைத்தால் அந்நினைவார்க்கு அப்பிரிவின் வருவதோர் துன்பம் இல்லையாம்; காமம் எனைத்து இனிது ஒன்றே காண் - அதனால் காமம் எத்துணையேனும் இனிதொன்றே காண். (புணர்ந்துழியும் பிரிந்துழியும் ஒப்ப இனிது என்பான், 'எனைத்தும் இனிது' என்றான். சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தான் ஆற்றிய வகை கூறியவாறு.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: காமம் யாதொன்றினானும் இனியதே காண்; தாம் விரும்பப்படுவாரை நினைக்க வருவதொரு துன்பம் இல்லையாயின். இது நீ இவ்வாறு ஆற்றாயாகின்றது துன்பம் பயக்குமென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்துக் கூறியது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தன்னுடைய அன்புக்குரிய காதலரைப் பிரிந்திருக்கும்போது நினைத்துக் கொண்டிருந்தால் நினைவார்க்குப் பிரிவினால் துன்பம் வருவது இல்லையாகும்.
Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar
Ninaippa Varuvadhondru El
Couplet
How great is love! Behold its sweetness past belief!Think on the lover, and the spirit knows no grief
Translation
Pains are off at the lover's thought In all aspects this love is sweet
Explanation
Even to think of one's beloved gives one no pain Sexuality, in any degree, is always delightful
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin
Theedhunto Mannum Uyirkku
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Madhup Kala
1 month ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.