திருக்குறள் 1206: மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான் — உற்றநாள் உள்ள உளேன்.
திருக்குறள் 1206 — நினைந்தவர் புலம்பல் (Sad Memories), காமத்துப்பால்.
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடியான்
உற்றநாள் உள்ள உளேன்.
கலைஞர் உரை
நான் அவரோடு சேர்ந்திருந்த நாட்களை நினைத்துத் தான் உயிரோடு இருக்கிறேன்; வேறு எதை நினைத்து நான் உயிர்வாழ முடியும்?
மு. வரதராசன் உரை
காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன்?
சாலமன் பாப்பையா உரை
அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு எதனால் வாழ்வேன்?
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: (அவரோடு புணர்ந்த ஞான்றை இன்பத்தை நினைந்து இறந்துபாடெய்தா நின்றாய்; அது மறத்தல் வேண்டும் என்றாட்குச் சொல்லியது.) யான் அவரொடு உற்ற நாள் உள்ள உளேன் - யான் அவரோடு புணர்நத ஞான்றை இன்பத்தை நினைதலான் இத் துன்ப வெள்ளத்தும் உயிர் வாழ்கின்றேன்; மற்று யான் என்னுளேன் - அது இன்றாயின், வேறு எத்தால் உயிர் வாழ்வேன்? (நாள்: ஆகுபெயர். 'உயிர் வாழ்வதற்கு வேறும் உள, அவை பெற்றிலேன்' என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. அவை அவன்தூது வருதல், தன்தூது சேறல் முதலாயின. 'அவை யாவும் இன்மையின், இதுவல்லது எனக்குப் பற்றுக் கோடு இல்லை', என்பது கருத்து.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: யான்அவரோடு புணர்ந்த நாள் இன்பத்தை நினைத்தலானே உயிர் வாழ்கின்றேன் அல்லது யாதொன்றினான் யான் உளேனாய் வாழ்கின்றேன்; இது தலைமகன் தலையளியை நினைந்து ஆற்றாளாயின தலைமகளை நோக்கி நீ இவ்வாறு நினைந்திரங்கல் உயிர்க்கு இறுதியாகுமென்ற தோழிக்கு அவள் கூறியது.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நான் அவருடன் இன்பம் நுகர்ந்த நாளினை நினைப்பதால் இத்துன்பக் காலத்திலும் உயிர்வாழ்கின்றேன். அவ்வாறு இல்லாமற் போனால் வேறு எப்படி உயிர் வாழ்ந்திருப்பேன்?.
Matriyaan Ennulen Manno Avaroti
Yaan Utranaal Ulla Ulen
Couplet
How live I yet? I live to ponder o'erThe days of bliss with him that are no more
Translation
Beyond the thought of life with him What else of life can I presume?
Explanation
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live ?
Comments (2)
Jayan Doctor
1 year ago
Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
Veezhvaarin Insol Peraaadhu Ulakaththu
Vaazhvaarin Vankanaar Il
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Reyansh Kala
1 year ago
A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.