இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல் — வல்லது அவர்அள஧க்கு மாறு. | குறள் எண் - 1321

Thirukkural Verse 1321

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்

வல்லது அவர்அள஧க்கு மாறு.

கலைஞர் உரை

எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது

மு. வரதராசன் உரை

அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.

சாலமன் பாப்பையா உரை

அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: [அஃதாவது , அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி , அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும் , தலைமகன் உவத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.](தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காதலிரிடத்தில் தவறு ஒன்றும் இல்லையென்றாலும் அவர் நம்மீது பேரன்பினை அளிக்கும் தன்மை அவருடன் பிணக்கினை உண்டாக்கிக் கொள்ள வல்லமையுடையதாகின்றது.

Illai Thavaravarkku Aayinum Ootudhal

Valladhu Avaralikku Maaru

Couplet

Although there be no fault in him, the sweetness of his loveHath power in me a fretful jealousy to move

Translation

He is flawless; but I do pout So that his loving ways show out

Explanation

Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike

Comments (2)

Pari Tank
Pari Tank
pari tank verified

1 month ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

Gatik Babu
Gatik Babu
gatik babu verified

1 month ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்

இந்நீரர் ஆகுதிர் என்று.

Thannai Unarththinum Kaayum Pirarkkumneer

Inneerar Aakudhir Endru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.