நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் — பண்பியார்க்கு உரைக்கோ பிற. | குறள் எண் - 1181

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
கலைஞர் உரை
என்னைப் பிரிந்து செல்வதற்கு என் காதலர்க்கு ஒப்புதல் அளித்துவிட்டேன்; ஆனால், இப்போது பிரிவுத் துன்பத்தால் என்னுடலில் பசலை படர்வதை, யாரிடம் போய்ச் சொல்வேன்?
மு. வரதராசன் உரை
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்; பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்?
சாலமன் பாப்பையா உரை
என்னை விரும்பிய என்னவர் பிரியச் சம்மதித்த நான், அவர் பிரிவைத் தாங்காமல் பசலை கொண்ட என் மேனியின் இயல்பை யாரிடம் போய்ச் சொல்வேன்?
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: [அது, பசப்புற்ற பருவரல் என விரியும்.அஃதாவது, பசப்புறுதலானாய வருத்தம். இதனைப் 'பந்தெறிந்த வயா' (கலித், குறிஞ் .3) என்பதுபோலக் கொள்க. பசப்பாவது, பிரிவாற்றாமையான் வருவதோர் நிறவேறுபாடு. இது, தலைமகனைக் காணப் பெறாதவழி நிகழ்வதாகலின், கண் விதுப்பு அழிதலின்பின் வைக்கப்பட்டது .] (முன் பிரிவுடம்பட்ட தலைமகள் அஃது ஆற்றாது பசந்தவழித் தன்னுள்ளே சொல்லியது.) நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் - என்னை நயந்தவர்க்கு அது பொழுது பிரிவை உடம்பட்ட நான்; பசந்த என் பண்பு யார்க்கு உரைக்கோ - அதனை ஆற்றாது இது பொழுது பசந்த என் இயல்பினை யார்க்குச் சொல்வேன்? ('பிற' என்பது அசைநிலை. உடம்படாவழி ஒழிதல் குறித்துப் பிரிவுணர்த்தினராகலின் அவரன்புடையர் என்னும் கருத்தான் 'நயந்தவர்' என்றும், இதுவே உடம்பாடாக மேலும் பிரிவு நிகழுமாகலின், இனி அவரைக் கூடுதலரிது என்னும் கருத்தான் 'நல்காமை' என்றும், முன்னர் உடம்படுதலும் பின்னர் ஆற்றாது பசத்தலும் பிறர் செய்தனவல்ல என்பாள் 'பசந்த என் பண்பு' என்றும், யான் செய்துகொண்ட துன்பத்தினை இனி ஒருவருக்குச் சொல்லலும் பழியாம் என்னும் கருத்தால் 'யார்க்கு உரைக்கோ' என்றும் கூறினாள்.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: காதலிக்கப்பட்டவர்க்கு அவர் அருளாமையை இசைந்த யான் பசந்தவெனது நிறத்தை மற்று யாவர்க்குச் சொல்லுவேன். இது தலைமகள் இப்பசப்பை யாவரால் நீக்குவேனென்று வெருட்சி கொண்டு கூறியது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: என்னிடம் நயந்து பேசிய தலைவர்க்குப் பிரிவை உடன்பட்டேன். அப் பிரிவினைப் பொறுக்காமல் இப்போது பசந்த எனது நிலையினை யார்க்குச் சொல்லுவேன்?.
Nayandhavarkku Nalkaamai Nerndhen Pasandhaven
Panpiyaarkku Uraikko Pira
Couplet
I willed my lover absent should remain;Of pining's sickly hue to whom shall I complain
Translation
My lover's parting, I allowed Whom to complain my hue pallid?
Explanation
I who (then) consented to the absence of my loving lord, to whom can I (now) relate the fact of my having turned sallow
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.
Aakkam Adharvinaaich Chellum Asaivilaa
Ookka Mutaiyaa Nuzhai
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Jayesh Desai
4 weeks ago
Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.