அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் — மேனிமேல் ஊரும் பசப்பு. | குறள் எண் - 1182

Thirukkural Verse 1182

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்

மேனிமேல் ஊரும் பசப்பு.

கலைஞர் உரை

பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!

மு. வரதராசன் உரை

அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

சாலமன் பாப்பையா உரை

இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான் ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால் - என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல் இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ('குருதி கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1) என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது. இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: காதலர் வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல: நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: இந்தப் பசப்பு நிறம், அவர் உண்டாக்கினார் என்கின்ற பெருமதத்தால் என் உடம்பின் மீது ஊர்ந்து செல்லுகின்றது.

Avardhandhaar Ennum Thakaiyaal Ivardhandhen

Menimel Oorum Pasappu

Couplet

'He gave': this sickly hue thus proudly speaks,Then climbs, and all my frame its chariot makes

Translation

Claiming it is begot through him Pallor creeps and rides over my frame

Explanation

Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா

நாடென்ப நாட்டின் தலை.

Ketariyaak Ketta Itaththum Valangundraa

Naatenpa Naattin Thalai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.