z

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். | குறள் எண் - 1224

kaadhalar-ilvazhi-maalai-kolaikkalaththu-edhilar-pola-varum-1224

87

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்.

கலைஞர் உரை

"காதலர் பிரிந்திருக்கும்போது வருகிற மாலைப் பொழுது கொலைக் களத்தில் பகைவர் ஓங்கி வீசுகிற வாளைப்போல் வருகிறது"

மு. வரதராசன் உரை

"காதலர் இல்லாத இப்போது, கொலை செய்யும் இடத்தில் பகைவர் வருவது போல் மாலைப்பொழுது ( என் உயிரைக் கொள்ள) வருகின்றது."

சாலமன் பாப்பையா உரை

"அவர் என்னைப் பிரியாமல் என்னுடன் இருந்தபோது எல்லாம் என் உயிர் வளர வந்த இந்த மாலைப் பொழுது, அவர் என்னைப் பிரிந்து இருக்கும் இப்போது, கொலைக் காலத்திற்கு வரும் கொலையாளிகள் போலக் கருணை இல்லாமல் வருகிறது."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மாலை - காதலர் உள்ள பொழுதெல்லாம் என் உயிர் தளிர்ப்ப வந்த மாலை; காதலர் இல்வழி - அவர் இல்லாத இப்பொழுது; கொலைக்களத்து ஏதிலர் போல வரும் - அஃது ஒழிந்து நிற்றலே அன்றிக் கொல்லுங்களரியில் கொலைஞர் வருமாறுபோல அவ்வுயிரைக் கோடற்கு வாராநின்றது. (ஏதிலர் - அருள் யாதுமில்லார். 'முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து வந்த பொழுதும், இன்று என்மேற் பகையாய்த் துன்பஞ்செய்து வாரா நின்றது. இனி யான் ஆற்றுமாறு என்னை'? என்பதாம்.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும். இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது. "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காதலர் இருந்தபொழுதெல்லாம் எனது உயிர்தழைக்கும்படியாக வந்த மாலைப் பொழுது அவர் இல்லாத இப்போது கொலை செய்கின்ற களத்திற்கு வருகின்ற கொலைஞர்களைப் போல வருகின்றது. "

Kaadhalar Ilvazhi Maalai Kolaikkalaththu
Edhilar Pola Varum

Couplet

When absent is my love, the evening hour descends,As when an alien host to field of battle wends

Translation

Lover away, comes eventide Like slayer to field of homicide

Explanation

In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter

87

Write Your Comment