மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். | குறள் எண் - 1226

maalainoi-seydhal-manandhaar-akalaadha-kaalai-arindha-thilen-1226

28

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன்.

"மாலைக்காலம் இப்படியெல்லாம் இன்னல் விளைவிக்கக் கூடியது என்பதைக் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் இருந்த போது நான் அறிந்திருக்கவில்லை"

கலைஞர் உரை

"மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்ய வல்லது என்பதைக் காதலர் என்னை விட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை."

மு. வரதராசன் உரை

"முன்பு எனக்கு மகிழ்ச்சி தந்த மாலைப்பொழுது இப்படித் துன்பம் தரும் என்பதை, என்னை மணந்த காதலர் என்னைப் பிரிவதற்கு முன்பு நான் அறிந்தது கூட இல்லை."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: ('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன். ('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன். அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: முன்பெல்லாம் எனக்கு நட்பாக இருந்து இன்பம் செய்த மாலைப் பொழுது பகையாய்த் துன்பம் செய்தலைக் காதலர் பிரிதற்கு முன்னே அறிந்தேனில்லை. "

வி முனுசாமி உரை

Maalainoi Seydhal Manandhaar Akalaadha
Kaalai Arindha Thilen

Couplet

The pangs that evening brings I never knew,Till he, my wedded spouse, from me withdrew

Translation

Evening pangs I have not known When my lord nev'r left me alone

Explanation

Previous to my husband's departure, I know not the painful nature of evening

28

Write Your Comment