z

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு. | குறள் எண் - 1284

ootarkan-sendrenman-thozhi-adhumarandhu-kootarkan-sendradhu-en-nenju-1284

86

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு.

கலைஞர் உரை

"ஊடுவதற்காகச் சென்றாலும்கூட அதை நெஞ்சம் மறந்து விட்டுக் கூடுவதற்கு இணங்கி விடுவதே காதலின் சிறப்பு"

மு. வரதராசன் உரை

"தோழி! யான் அவரோடு ஊடுவதற்காகச் சென்றேன்; ஆனால், என்னுடைய நெஞ்சம் அந்த நோக்கத்தை மறந்து அவரோடு கூடுவதற்காகச் சென்றது."

சாலமன் பாப்பையா உரை

"தோழி! காதலரைக் காண்டுபதற்கு முன், அவர் செய்த தவற்றை எண்ணி ஊட நினைத்தேன்; அவரைப் பார்த்த பிறகு, அதை மறந்து, அவருடன் கூடவே என் மனம் சென்றது."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தோழி - தோழி; ஊடற்கண் சென்றேன் - காதலரைக் காணாமுன் அவர் செய்த தவற்றைத் தன்னோடு நினைந்து யான் அவரோடு ஊடுதற்கண்ணே சென்றேன்; என் நெஞ்சு அது மறந்து கூடற்கண் சென்றது - கண்டபின் என் நெஞ்சு அதனை மறந்து கூடுதற்கண்ணே சென்றது. (சேறல் நிகழ்தல் நினைத்த நெஞ்சிற்கும் ஒத்தலின், 'அது மறந்து' என்றாள். அச்செலவாற் பயன்என் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'அவ்வெல்லையிலே நெஞ்சு அறைபோகலான், அது முடிந்ததில்லை' என்பதாம்.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: தோழி! யான் ஊடலைக் கருதிச்சென்றேன். அவனைக் கண்டபொழுதே அதனை மறந்து கூடலைக்கருதிற்று என்னெஞ்சு. இது நீ அவனோடு புலவாது கூடியதென்னை யென்று நகையாடிய தோழிக்குத் தலைமகள் கூறியது. "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தோழி! காதலரிடம் பிணங்கிக் கொள்வதற்காகச் சென்றேன். காதலரைக் கண்டதும் எனது நெஞ்சம் ஊடலினை மறந்துவிட்டு அவருடன் கூடுவதற்குச் சென்றுவிட்டது. "

Ootarkan Sendrenman Thozhi Adhumarandhu
Kootarkan Sendradhu En Nenju

Couplet

My friend, I went prepared to show a cool disdain;My heart, forgetting all, could not its love restrain

Translation

Huff I would, maid, but I forget; And leap to embrace him direct

Explanation

My heart, forgetting all, could not its love restrain

86

Write Your Comment