திருக்குறள் 1282: தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும் — காமம் நிறைய வரின்.

Thirukkural Verse 1282

திருக்குறள் 1282 — புணர்ச்சி விதும்பல் (Desire for Reunion), காமத்துப்பால்.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்

காமம் நிறைய வரின்.

கலைஞர் உரை

பனையளவாகக் காதல் பெருகிடும் போது தினையளவு ஊடலும் கொள்ளாமல் இருக்க வேண்டும்

மு. வரதராசன் உரை

காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

பெண்களுக்குக் காதல் மிகப் பெரிதாகுமானால், கணவனோடு மிகச் சிறிதளவும் ஊடாமல் இருக்க வேண்டும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும். ('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின். இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மகளிர்க்குக் காமம் பனையளவினைவிட மிகுதியாக உண்டாகிவிடுமானால் அவரால் தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படுவதாகும்.

Thinaiththunaiyum Ootaamai Ventum Panaith

Thunaiyum Kaamam Niraiya Varin

Couplet

When as palmyra tall, fulness of perfect love we gain,Distrust can find no place small as the millet grain

Translation

When passion grows palmyra-tall Sulking is wrong though millet-small

Explanation

If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet

Comments (1)

Inaaya  Sachdev
Inaaya Sachdev
inaaya  sachdev verified

1 year ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று

இகழ்வார்பின் சென்று நிலை.

Pukazhindraal Puththelnaattu Uyyaadhaal Enmatru

Ikazhvaarpin Sendru Nilai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.