திருக்குறள் 1240: கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே — ஒண்ணுதல் செய்தது கண்டு.

Thirukkural Verse 1240

திருக்குறள் 1240 — உறுப்புநலன் அழிதல் (Wasting Away), காமத்துப்பால்.

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே

ஒண்ணுதல் செய்தது கண்டு.

கலைஞர் உரை

பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது

மு. வரதராசன் உரை

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

சாலமன் பாப்பையா உரை

குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்று - தண் வளி போழவந்த கண்ணின் பசப்புத் துன்பமுற்றது; ஒண்ணுதல் செய்தது கண்டு. தனக்கு அயலாய ஒண்ணுதல் விளைத்த பசப்பைக் கண்டு. ('அது கைகளை ஊக்க அவ்வளவில் பசந்தது, யான் கைகளையும் ஊக்கி மெய்களும் நீங்கிச் சிறுகாற்று ஊடறுக்கும் துணையும் பசந்திலன்', எனத் தன் வன்மையும் அதன் மென்மையும் கருதி வெள்கிற்று என்பதாம், ஆகவே, 'அவளுறுப்புக்கள் ஒன்றினொன்று முற்பட்டு நலன் அழியும் , யாம் கடிதிற் சேறும்' என்பது கருத்தாயிற்று.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஒள்ளியநுதல் பசந்ததுகண்டு கண்ணிலுண்டான பசலை கலங்கிற்று.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தனக்கு அருகில் இருக்கும் ஒளிபொருந்திய நெற்றியடைந்த பசப்பு நிறத்தினைக் கண்டு கண்களின் பசப்பு நிறம் துன்பத்தினை அடைந்து விட்டது.

Kannin Pasappo Paruvaral Eydhindre

Onnudhal Seydhadhu Kantu

Couplet

The dimness of her eye felt sorrow now,Beholding what was done by that bright brow

Translation

Pale eyes pained seeing the pallor Of the bright forehead of this fair

Explanation

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

Comments (3)

Arnav Lalla
Arnav Lalla
arnav lalla verified

1 year ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Eva Chanda
Eva Chanda
eva chanda verified

1 year ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Aniruddh Soni
Aniruddh Soni
aniruddh soni verified

1 year ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

Akazhvaaraith Thaangum Nilampolath Thammai

Ikazhvaarp Poruththal Thalai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.