திருக்குறள் 694: செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல் — ஆன்ற பெரியா ரகத்து.

Thirukkural Verse 694

திருக்குறள் 694 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Conduct in the Presence of the King), பொருட்பால்.

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்

ஆன்ற பெரியா ரகத்து.

கலைஞர் உரை

ஆற்றல் வாய்ந்த பெரியவர்கள் முன்னே, மற்றவர்கள் காதுக்குள் பேசுவதையும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதையும் தவிர்த்து, அடக்கமெனும் பண்பைக் காத்திடல் வேண்டும்

மு. வரதராசன் உரை

வல்லமை அமைந்த பெரியாரிடத்தில் (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதல் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுகவேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

மேன்மை மிக்க பெரியவர் அருகே இருக்கும்போது, பிறருடன் காதருகே மெல்லப் பேசுவதையும் அடுத்தவர் முகம் பார்த்துக் கண்சிமிட்டிச் சிரிப்பதையும் செய்யாது நடந்துகொள்க.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு இருந்தால்; செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண் சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும் தவிர்த்து ஒழுகுக. (சேர்தல்: பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம் குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது கருத்து.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: அமைந்த பெரியாரிடத்து ஒருவன் செவியுட் சொல்லுதலும், ஒருவன் முகம்பார்த்துத் தம்மில் நகுதலும் தவிர்ந்தொழுகல் வேண்டும். இது கூற்றும் நகையும் ஆகாவென்றது.

Sevichchollum Serndha Nakaiyum Aviththozhukal

Aandra Periyaa Rakaththu

Couplet

All whispered words and interchange of smiles repress,In presence of the men who kingly power possess

Translation

Whisper not; nor smile exchange Amidst august men's assemblage

Explanation

While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others

Comments (1)

Nayantara Ahluwalia
Nayantara Ahluwalia
nayantara ahluwalia verified

1 year ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு

பேராண்மை வேண்டு பவர்.

Seerinum Seeralla Seyyaare Seerotu

Peraanmai Ventu Pavar

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.