திருக்குறள் 695: எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை — விட்டக்கால் கேட்க மறை.

Thirukkural Verse 695

திருக்குறள் 695 — மன்னரைச் சேர்ந்து ஒழுகல் (Conduct in the Presence of the King), பொருட்பால்.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை

விட்டக்கால் கேட்க மறை.

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

கலைஞர் உரை

பிறருடன் மறைவாகப் பேசிக் கொண்டிருக்கும்போது அதை ஒட்டுக் கேட்கவும் கூடாது; அது என்னவென்று வினவிடவும் கூடாது அவர்களே அதுபற்றிச் சொன்னால் மட்டுமே கேட்டுக்கொள்ள வேண்டும்

மு. வரதராசன் உரை

(அரசர் மறைபொருள் பேசும் போது) எப்பொருளையும் உற்றுக் கேட்காமல் தொடர்ந்து வினவாமல் அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

ஆட்சியாளர் பிறருடன் ரகசியம் பேசம்போது காதுகொடுத்துக் கேட்காதே; என்ன பேச்சு என்று நீயாகக் கேளாதே; அதைப் பற்றி ஆட்சியாளரே சொன்னால் கேட்டுக் கொள்க.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி; எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி கொடுத்துக் கொள்ளாது; தொடரார் - அவனை முடுகி வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால் கேட்க - அம்மறைப் பொருளை அவன் தானே அடக்காது சொல்லியக்கால் கேட்க. ('ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார், 'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின் கண் வந்தது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: யாதொரு பொருளையும் செவிகொடுத்து ஓராது, தொடர்ந்து கேளாது, அப்பொருளை மறைத்தல் தவிர்ந்தால், பின்பு கேட்க. இது கேட்டல் விருப்பமும் குற்ற மென்றது.

Epporulum Oraar Thotaraarmar Rapporulai

Vittakkaal Ketka Marai

Kissend private chat AD
Kissend

Private chats.
No phone number.

Connect by username. Keep your number private and your conversations personal.

Start private chat ↗ Free to start

Couplet

Seek not, ask not, the secret of the king to hear;But if he lets the matter forth, give ear

Translation

Hear not, ask not the king's secret Hear only when he lets it out

Explanation

(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by

Comments (1)

Ela Mand
Ela Mand
ela mand verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்

மருளானாம் மாணாப் பிறப்பு

Porulaanaam Ellaamendru Eeyaadhu Ivarum

Marulaanaam Maanaap Pirappu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.