திருக்குறள் 493: ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து — போற்றார்கண் போற்றிச் செயின்.

Thirukkural Verse 493

திருக்குறள் 493 — இடனறிதல் (Knowing the Place), பொருட்பால்.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து

போற்றார்கண் போற்றிச் செயின்.

கலைஞர் உரை

தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றி கிட்டும்

மு. வரதராசன் உரை

தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,

சாலமன் பாப்பையா உரை

பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின். ('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: வலியில்லாதாரும் வலியுடையராய் வெல்வர்: பகைவர்மாட்டு வினைசெய்யும் இடமறிந்து தம்மைக் காத்து வினை செய்வாராயின்.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: வலிமை இல்லாதவர்களும் வலிமையுடையவராகி வெல்லுவார்கள். எப்போது என்றால், அதற்குத் தகுந்த இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடம் வினைகளைச் செய்வார்களானால் என்பதாம்.

Aatraarum Aatri Atupa Itanarindhu

Potraarkan Potrich Cheyin

Couplet

E'en weak ones mightily prevail, if place of strong defence,They find, protect themselves, and work their foes offence

Translation

Weaklings too withstand foe's offence In proper fields of strong defence

Explanation

Even the powerless will become powerful and conquer, if they select a proper field (of action), and guard themselves, while they make war on their enemies

Comments (1)

Saanvi Cheema
Saanvi Cheema
saanvi cheema verified

1 year ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

Kaana Muyaleydha Ampinil Yaanai

Pizhaiththavel Endhal Inidhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.