பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத் — தீராமை ஆர்க்குங் கயிறு. | குறள் எண் - 482

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு.
கலைஞர் உரை
காலம் உணர்ந்து அதற்கேற்பச் செயல்படுதல், அந்த நற்செயலின் வெற்றியை நழுவவிடாமல் கட்டிப்பிணிக்கும் கயிறாக அமையும்
மு. வரதராசன் உரை
காலத்தோடுப் பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் ( நில்லாத இயல்பு உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
சாலமன் பாப்பையா உரை
காலந் தவறாமல் காரியம் ஆற்றுவது, ஓடும் செல்வத்தை ஓடாமல் கட்டும் கயிறு ஆகும்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு பொருந்த வினைசெய்து ஒழுகுதல், திருவினைத் தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும் கயிறாம். '(காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல் செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான், அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது என்பதாம்.)' .
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: காலத்தோடு பொருந்த ஒழுகுதல் செல்வத்தை நீங்காமல் கட்டுவதொரு கயிறாம். இனிக் காலமறிந்ததனால் வரும் பயன் கூறுவார் முற்படச் செல்வம் கெடாதென்றார்.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காலத்தோடு பொருந்த தொழில்செய்து நடந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்வதானது செல்வத்தினைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டுகின்ற கயிறாகும்.
Paruvaththotu Otta Ozhukal Thiruvinaith
Theeraamai Aarkkung Kayiru
Couplet
The bond binds fortune fast is ordered effort made,Strictly observant still of favouring season's aid
Translation
Well-ordered seasoned act is cord That fortune binds in bon accord
Explanation
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king)
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.
Viyavarka Egngnaandrum Thannai Nayavarka
Nandri Payavaa Vinai
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Elakshi Vala
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.