திருக்குறள் 483: அருவினை யென்ப உளவோ கருவியான் — காலம் அற஧ந்து செயின்.

Thirukkural Verse 483

திருக்குறள் 483 — காலமறிதல் (Knowing the fitting Time), பொருட்பால்.

அருவினை யென்ப உளவோ கருவியான்

காலம் அற஧ந்து செயின்.

கலைஞர் உரை

தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை

மு. வரதராசன் உரை

(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்றக் காலத்தையும் அறிந்து செய்தால் அரிய செயல்கள் என்பது உண்டோ.

சாலமன் பாப்பையா உரை

செயலைச் செய்து முடிப்பதற்கு ஏற்ற திறமைகளுடனும் தந்திரங்களுடனும், உரிய காலத்தைக் கண்டு ஒரு செயலைச் செய்தால் செய்வதற்கு அரிய செயல் என்று ஏதேனும் உண்டா?

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: அருவினை என்ப உளவோ - அரசரால் செய்தற்கு அரிய வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ, கருவியான் காலம் அறிந்து செயின் - அவற்றை முடித்¢தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம் காலம் அறிந்து செய்வராயின். (கருவிகளாவன : மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம். 'அவை உளவாய வழியும் காலம் வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்' என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: அரிய வினையென்று சொல்லப்படுவன உளவோ? முடிக்கலாங் கருவியோடே கூடக் காலத்தை யறிந்து செய்ய வல்லாராயின்.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அவற்றை முடித்ததற்கு ஏற்ற கருவிகளுடனே காலமறிந்து செய்வாராயின், செய்வதற்கு அருமையான தொழில்கள் என்று சொல்லப்படுவனவும் உண்டோ?.

Aruvinai Yenpa Ulavo Karuviyaan

Kaalam Arindhu Seyin

Couplet

Can any work be hard in very fact,If men use fitting means in timely act

Translation

What is hard for him who acts With proper means and time and tacts?

Explanation

Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?

Comments (2)

Ryan Trivedi
Ryan Trivedi
ryan trivedi verified

1 year ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Trisha Hayre
Trisha Hayre
trisha hayre verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்

கண்ணோட்டம் இன்மையும் இல்.

Kannottam Illavar Kannilar Kannutaiyaar

Kannottam Inmaiyum Il

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.