திருக்குறள் 484: ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் — கருதி இடத்தாற் செயின்.

Thirukkural Verse 484

திருக்குறள் 484 — காலமறிதல் (Knowing the fitting Time), பொருட்பால்.

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்

கருதி இடத்தாற் செயின்.

கலைஞர் உரை

உரிய காலத்தையும் இடத்தையும் ஆய்ந்தறிந்து செயல்பட்டால் உலகமேகூடக் கைக்குள் வந்துவிடும்

மு. வரதராசன் உரை

(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும் கைகூடும்.

சாலமன் பாப்பையா உரை

ஏற்ற காலத்தையும் இடத்தையும் அறிந்து ஒரு செயலைச் செய்தால், பூவுலகம் முழுமையையும் வேண்டினாலும் அது கைவசப்படும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம் முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது அவன் கையகத்ததாம், காலம் கருதி இடத்தான் செயின் - அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து இடத்தோடு பொருந்தச் செய்வானாயின். ('இடத்தான்' என்பதற்கு மேல் 'கருவியான்' என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க, கைகூடாதனவும் கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும் காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: உலகமெல்லாம் பெறுதற்கு நினைத்தானாயினும் பெறலாம்: காலத்தைக் குறித்து இடனறிந்து செய்வனாயின். இஃது எல்லாப் பொருளையு மெய்துமென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காலத்தினைக் கருதிக் தக்க இடத்தோடு பொருந்த அதற்குச் செய்யவேண்டிய செயல்களைச் செய்வாராயின், உலகு முழுவதையும் ஒருவன் ஆள நினைத்தாலும் அது முடியும்.

Gnaalam Karudhinung Kaikootung Kaalam

Karudhi Itaththaar Seyin

Couplet

The pendant world's dominion may be won,In fitting time and place by action done

Translation

Choose proper time and act and place Even the world you win with ease

Explanation

Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place

Comments (3)

Ahana  Chana
Ahana Chana
ahana  chana verified

1 year ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

Aarush Yogi
Aarush Yogi
aarush yogi verified

1 year ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

Mahika Gola
Mahika Gola
mahika gola verified

1 year ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செவுக்குண வில்லாத போழ்து சிறிது

வயிற்றுக்கும் ஈயப் படும்.

Sevikkuna Villaadha Pozhdhu Siridhu

Vayitrukkum Eeyap Patum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.