பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து — உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். | குறள் எண் - 487

Thirukkural Verse 487

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

கலைஞர் உரை

பகையை வீழ்த்திட அகத்தில் சினங்கொண்டாலும் அதனை வெளிப்படுத்தாமல் இடம் காலம் இரண்டுக்கும் காத்திருப்பதே அறிவுடையார் செயல்

மு. வரதராசன் உரை

அறிவுடையவர் ( பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார், (வெல்வதற்கு ஏற்ற) காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வார்.

சாலமன் பாப்பையா உரை

தம்பகைவர் அடாது செய்தால் அவர் அறியத் தம் பகைமையை அறிவுடையவர், விரைந்து வெளியே காட்டமாட்டார், ஆனால், ஏற்ற காலம் நோக்கிச் சினத்தை மனத்திற்குள் வைத்திருப்பர்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: ஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார், காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர். ('பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்' 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார், அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: கதுமென அவ்விடத்தே யுடம்பு வேரார்: தமக்குச் செய்யலாங் காலம் பார்த்து மனம் வேர்ப்பர் ஒள்ளியர். வேர்ப்பு பொறாமையால் வருவதொன்று. இது பகைவர் பொறாதவற்றைச் செய்தாலும் காலம் பார்க்கவேண்டுமென்றது.

Pollena Aange Puramveraar Kaalampaarththu

Ulverppar Olli Yavar

Couplet

The glorious once of wrath enkindled make no outward show,At once; they bide their time, while hidden fires within them glow

Translation

The wise jut not their vital fire They watch their time with hidden ire

Explanation

The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within

Comments (3)

Biju Tiwari
Biju Tiwari
biju tiwari verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Indrans Lanka
Indrans Lanka
indrans lanka verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Diya Samra
Diya Samra
diya samra verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்

வழுக்காயும் கேடீன் பது.

Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar

Vazhukka�yum Keteen Padhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.