திருக்குறள் 405: கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து — சொல்லாடச் சோர்வு படும்.

Thirukkural Verse 405

திருக்குறள் 405 — கல்லாமை (Ignorance), பொருட்பால்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து

சொல்லாடச் சோர்வு படும்.

கலைஞர் உரை

கல்வியறிவில்லாதவர்கள் தங்களைப் பெரிய மேதைகளைப் போல் காட்டிக் கொள்ளும் போலி வேடம், கற்றுத் தேர்ந்த அறிஞர்களிடம் அவர்கள் உரையாடும்போது கலைந்து போய்விடும்

மு. வரதராசன் உரை

கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

சாலமன் பாப்பையா உரை

படித்தவர் முன் பேசினால் படிக்காதவரின் பெருமை குறைந்து போகும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத ஒருவன் யான் அறிவுடையேன் எனத் தன்னை மதிக்கும் மதிப்பு, தலைப்பெய்து சொல்லாடச் சோர்வுபடும் - அவற்றைக்கற்றவன் கண்டு உரையாடக் கெடும். ('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர் வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது; சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும். இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நூல்களைக் கல்லாத ஒருவன், தான் கற்றவனொன்று தன்னை மதித்துக் கொள்ளும் மதிப்பு அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக் கெட்டுவிடும்.

Kallaa Oruvan Thakaimai Thalaippeydhu

Sollaatach Chorvu Patum

Couplet

As worthless shows the worth of man unlearned,When council meets, by words he speaks discerned

Translation

A man untaught when speech he vaunts Sadly fails before savants

Explanation

The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

Natuvindri Nanporul Veqkin Kutipondrik

Kutramum Aange Tharum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.