திருக்குறள் 408: நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே — கல்லார்கண் பட் ட திரு.

Thirukkural Verse 408

திருக்குறள் 408 — கல்லாமை (Ignorance), பொருட்பால்.

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே

கல்லார்கண் பட் ட திரு.

கலைஞர் உரை

முட்டாள்களிடம் குவிந்துள்ள செல்வம், நல்லவர்களை வாட்டும் வறுமையைவிட அதிக துன்பத்தைத் தரும்

மு. வரதராசன் உரை

கல்லாதவனிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம் உள்ள வறுமையைவிட மிகத்துன்பம் செய்வதாகும்.

சாலமன் பாப்பையா உரை

படிக்காதவரிடம் இருக்கும் செல்வம், நல்லவரிடம் இருக்கும் வறுமையைக் காட்டிலும் கொடியது.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது, கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம். (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: நல்லார்மாட்டு உண்டாகிய வறுமைபோலப் பிறர்க்கு இன்னாமையைச் செய்யும்; கல்லாதார்மாட்டு உண்டாகிய செல்வம். இது செல்வமுண்டாயின், பிறரைத் துன்பமுறுவிப்பரென்றது.

Nallaarkan Patta Varumaiyin Innaadhe

Kallaarkan Patta Thiru

Couplet

To men unlearned, from fortune's favour greater-evil springsThan poverty to men of goodly wisdom brings

Translation

Wealth in the hand of fools is worse Than a learned man's empty purse

Explanation

Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned

Comments (3)

Anika Ratti
Anika Ratti
anika ratti verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Yakshit Trivedi
Yakshit Trivedi
yakshit trivedi verified

1 year ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Zeeshan Sastry
Zeeshan Sastry
zeeshan sastry verified

1 year ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும்.

Oozhir Peruvali Yaavula Matrondru

Soozhinun Thaanmun Thurum

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.