குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து — மாண்ட உஞற்றி லவர்க்கு. | குறள் எண் - 604

Thirukkural Verse 604

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து

மாண்ட உஞற்றி லவர்க்கு.

கலைஞர் உரை

சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும்

மு. வரதராசன் உரை

சோம்பலில் அகப்பட்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்கு குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

சாலமன் பாப்பையா உரை

சோம்பலில் வீழ்வதால் சிறந்தவற்றையேச் செய்யும் முயற்சியே இல்லாதவரின் குடும்பமும் அழியும் குற்றமும் பெருகும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின்கண்ணே வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும். ('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்' என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள் முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை கூறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: குடியுங் கெட்டுக் குற்றமும் மிகும்; சோம்பின்கண்ணே பொருந்தி மாட்சிமைப்பட்ட முயற்சி யில்லாதார்க்கு. இது பிறாரால் இகழப்படுவ ரென்றது.

Kutimatindhu Kutram Perukum Matimatindhu

Maanta Ugnatri Lavarkku

Couplet

His family decays, and faults unheeded thrive,Who, sunk in sloth, for noble objects doth not strive

Translation

Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth

Explanation

Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions

Comments (2)

Oorja Yohannan
Oorja Yohannan
oorja yohannan verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Ivana Apte
Ivana Apte
ivana apte verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.

Utraan Alavum Piniyalavum Kaalamum

Katraan Karudhich Cheyal

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.