திருக்குறள் 609: குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் — மடியாண்மை மாற்றக் கெடும்.

Thirukkural Verse 609

திருக்குறள் 609 — மடி இன்மை (Unsluggishness), பொருட்பால்.

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்

மடியாண்மை மாற்றக் கெடும்.

கலைஞர் உரை

தன்னை ஆட்கொண்டுள்ள சோம்பலை ஒருவன் அகற்றிவிட்டால், அவனது குடிப்பெருமைக்கும், ஆண்மைக்கும் சிறப்பு தானே வந்து சேரும்

மு. வரதராசன் உரை

ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றிவிட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்தக் குற்றம் தீர்ந்து விடும்.

சாலமன் பாப்பையா உரை

ஒருவன் சோம்பலுக்கு அடிமையாவதை விட்டுவிட்டால், அவனது குடும்பத்திற்குள் வந்த சிறுமைகள் அழிந்துவிடும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன் மடியாளுந் தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த குற்றங்கள் கெடும். (மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏதுவாய தாமத குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத்தொகை. 'அவற்றின்கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: குடியை யாளுதலுடைமையின்கண் வந்த குற்றமானது ஒருவன் சோம்புடைமையைக் கெடுக்கக் கெடும். குற்றம்- குடிக்குவேண்டுவன செய்யாமையால் வருங்குற்றம்.

Kutiyaanmai Yulvandha Kutram Oruvan

Matiyaanmai Maatrak Ketum

Couplet

Who changes slothful habits savesHimself from all that household rule depraves

Translation

The blots on race and rule shall cease When one from sloth gets his release

Explanation

When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.

Aranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal

Penmai Nayavaamai Nandru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.