திருக்குறள் 528: பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் — அதுநோக்கி வாழ்வார் பலர்.

Thirukkural Verse 528

திருக்குறள் 528 — சுற்றந் தழால் (Cherishing Kinsmen), பொருட்பால்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்

அதுநோக்கி வாழ்வார் பலர்.

கலைஞர் உரை

அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்

மு. வரதராசன் உரை

அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை

சுற்றத்தார் எல்லாரையும் ஒன்று போலவே எண்ணாமல், அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆட்சியாளன் உபசரிப்பான் என்றால், அச்சிறப்பை எண்ணி அவனை விடாமல் வாழும் சுற்றத்தார் பலராவர்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர். (உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர். இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

Podhunokkaan Vendhan Varisaiyaa Nokkin

Adhunokki Vaazhvaar Palar

Couplet

Where king regards not all alike, but each in his degree,'Neath such discerning rule many dwell happily

Translation

From public gaze when kings perceive Each one's merits so many thrive

Explanation

Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit

Comments (1)

Vanya Khare
Vanya Khare
vanya khare verified

1 year ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு.

Arumarai Sorum Arivilaan Seyyum

Perumirai Thaane Thanakku

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.