திருக்குறள் 1046: நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் — சொற்பொருள் சோர்வு படும்.
திருக்குறள் 1046 — நல்குரவு (Poverty), பொருட்பால்.
நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.
கலைஞர் உரை
அரிய பல் நூல்களின் கருத்துகளையும் ஆய்ந்துணர்ந்து சொன்னாலும், அதனைச் சொல்பவர் வறியவராக இருப்பின் அக்கருத்து எடுபடாமற் போகும்
மு. வரதராசன் உரை
நல்ல நூற் பொருளை நன்றாக உணர்ந்து எடுத்துச் சொன்னப் போதிலும் வறியவர் சொன்ன சொற்பொருள் கேட்பார் இல்லாமல் பயன்படாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை
நல்ல கருத்துக்களைத் தெளிவாகத் தெரிந்து சொன்னாலும், சொல்பவர் ஏழை என்றால் அவர் சொல் மதிக்கப் பெறாது.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: நற்பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் - மெய்ந்நூற் பொருளைத் தெளிய அறிந்து சொன்னாராயினும்; நல்கூர்ந்தார் சொற்பொருள் சோர்வு படும் - நல்கூர்ந்தார் சொல்லுஞ் சொல் பொருளின்மையைத் தலைப்படும். (பொருளின்மையைத் தலைப்படுதலாவது 'யாம் இவர் சொல்லியன விரும்பிக் கேட்குமாயின் கண்ணோடி இவர் உறுகின்ற குறை முடிக்க வேண்டும் என்று அஞ்சி, யாவரும் கேளாமையின், பயனில் சொல்லாய் முடிதல். கல்வியும் பயன்படாது என்பதாம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: நல்ல பொருளினை மிகவும் ஆராய்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் சொல்லும் பொருள் சோர்வு படும். ஏற்றுக்கொள்வாரில்லை என்றவாறாயிற்று. இது கல்வி கெடும்: சுற்றத்தாரும் கைவிடுவ ரென்றது.
Narporul Nankunarndhu Sollinum Nalkoorndhaar
Sorporul Sorvu Patum
Couplet
Though deepest sense, well understood, the poor man's words convey,Their sense from memory of mankind will fade away
Translation
The poor men's words are thrown away Though from heart good things they say
Explanation
The words of the poor are profitless, though they may be sound in thought and clear in expression
Comments (2)
Advik Sen
1 year ago
So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
Kavarum Kazhakamum Kaiyum Tharukki
Ivariyaar Illaaki Yaar
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Navya Shan
1 year ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.