பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் — கலந்தீமை யால்திரிந் தற்று. | குறள் எண் - 1000

Thirukkural Verse 1000

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலந்தீமை யால்திரிந் தற்று.

கலைஞர் உரை

பாத்திரம் களிம்பு பிடித்திருந்தால், அதில் ஊற்றி வைக்கப்படும் பால் எப்படிக் கெட்டுவிடுமோ அதுபோலப் பண்பு இல்லாதவர்கள் பெற்ற செல்வமும் பயனற்றதாகி விடும்

மு. வரதராசன் உரை

பண்பு இல்லாதவன் பெற்ற பெரிய செல்வம், வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும்.

சாலமன் பாப்பையா உரை

நல்ல பண்பு இல்லாதவன் அடைந்த பெரும் செல்வம், பாத்திரக் கேட்டால் அதிலுள்ள நல்ல பால் கெட்டுப் போவது போலாம்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: பண்பு இலான் பெற்ற பெருஞ்செல்வம் - பண்பில்லாதவன் முன்னை நல்வினையான் எய்திய பெரிய செல்வம், அக்குற்றத்தால் ஒருவற்கும் பயன்படாது கெடுதல்; நன்பால் கலந்தீமையால் திரிந்தற்று - நல்ல ஆன் பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன் சுவைத்தாகாது கெட்டாற் போலும். ('கலத்தீமை' என்பது மெலிந்து நின்றது. தொழிலுவம மாகலின் பொருளின்கண் ஒத்த தொழில் வருவிக்கப்பட்டது. படைக்கும் ஆற்றல் இலனாதல் தோன்ற 'பெற்ற' என்றும், எல்லாப் பயனும் கொள்ளற்கு ஏற்ற இடனுடைமை தோன்ற, 'பெருஞ்செல்வம்' என்றும் கூறினார். அச்செல்வமும் பயன்படாது என்ற இதனான் வருகின்ற அதிகாரப் பொருண்மையும் தோற்றுவாய் செய்யப்பட்டது. இவை நான்கு பாட்டானும் அஃது இல்லாரது இழிவு கூறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: பண்பில்லாதவன் முன்னை நல்வினையா னெய்திய பெரிய செல்வம் அக்குற்றத்தால் ஒருவர்க்கும் பயன்படாது கெடுதல், நல்ல ஆன்பால் ஏற்ற கலத்தின் குற்றத்தால் இன்சுவைத்தாகாது கெட்டாற்போலும்.

Panpilaan Petra Perunjelvam Nanpaal

Kalandheemai Yaaldhirin Thatru

Couplet

Like sweet milk soured because in filthy vessel poured,Is ample wealth in churlish man's unopened coffers stored

Translation

The wealth heaped by the churlish base Is pure milk soured by impure vase

Explanation

The great wealth obtained by one who has no goodness will perish like pure milk spoilt by the

Comments (4)

Tarini Rege
Tarini Rege
tarini rege verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Kabir Kibe
Kabir Kibe
kabir kibe verified

4 weeks ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

Armaan Bir
Armaan Bir
armaan bir verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Lakshay Dugar
Lakshay Dugar
lakshay dugar verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்.

Palakutai Neezhalum Thangutaikkeezhk Kaanpar

Alakutai Neezha Lavar

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.