இளைதாக முள்மரம் கொல்க களையுநர் — கைகொல்லும் காழ்த்த இடத்து. | குறள் எண் - 879

Thirukkural Verse 879

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

கைகொல்லும் காழ்த்த இடத்து.

கலைஞர் உரை

முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும்

மு. வரதராசன் உரை

முள் மரத்தை இளையதாக இருக்கும் போதே வெட்ட வேண்டும், காழ்ப்பு ஏறி முதிர்ந்த போது வெட்டுகின்றவரின் கையை அது வருத்தும்.

சாலமன் பாப்பையா உரை

நம்மை அழி்க்க எண்ணும் முள் மரத்தை அது வளரும்போதே அழி்த்து விடுக; வளர்ந்து விட்டால் அழிக்க எண்ணுபவரின் கையை அது அழிக்கும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: முள்மரம் இளைதாகக் கொல்க - களைய வேண்டுவதாய முள்மரத்தை இளைதாய நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர் கைகொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண் களையலுறின் களைவார் கையினை அதுதான் களையும். (களைப்படுவதாய தம் பகையை அது மெலிதாய காலத்தே களைக, அன்றியே, வலிதாய காலத்துக் களையலுறின், தம்மை அதுதான் களையும் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல், இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: முள்மரத்தை இளைதாகவே களைக: முற்றினவிடத்துத் தன்னைக் களைவார் கையைக் கொல்லுமாதலால். இது பகைவர் வலியராவதன்முன்னே களைதல் வேண்டுமென்றது.

Ilaidhaaka Mulmaram Kolka Kalaiyunar

Kaikollum Kaazhththa Itaththu

Couplet

Destroy the thorn, while tender point can work thee no offence;Matured by time, 'twill pierce the hand that plucks it thence

Translation

Cut off thorn-trees when young they are; Grown hard, they cut your hands beware

Explanation

A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller

Comments (4)

Rati Thakur
Rati Thakur
rati thakur verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Riya Dada
Riya Dada
riya dada verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Ranbir Sharaf
Ranbir Sharaf
ranbir sharaf verified

4 weeks ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

Jivika Badal
Jivika Badal
jivika badal verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin

Theedhunto Mannum Uyirkku

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.