திருக்குறள் 809: கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை — விடாஅர் விழையும் உலகு.

Thirukkural Verse 809

திருக்குறள் 809 — பழைமை (Familiarity), பொருட்பால்.

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை

விடாஅர் விழையும் உலகு.

கலைஞர் உரை

தொன்றுதொட்டு உரிமையுடன் பழகிய நட்புறவைக் கைவிடாமல் இருப்பவரை உலகம் போற்றும்

மு. வரதராசன் உரை

உரிமை கெடாமல் தொன்று தொட்டு வந்த உறவு உடையவரின் தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.

சாலமன் பாப்பையா உரை

உரிமையை விடாது நெடுங்காலமாக வரும் நட்பினை உடையவர் கேடு செய்தாலும் அந்த நட்பை விட்டு விடாதவரை, அவரது நட்புள்ளம் குறித்து உலகம் விரும்பும்.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை; விடார் உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை உலகம் நட்புக்குறித்து விரும்பும். ('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது. விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது. 'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி 'நட்புத் தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: குற்றம் உண்டாயின் அவ்விடத்து நட்பினிற் கெடாராய்க் குலத்தின்வழி வந்த நட்புடையாராது நட்பை விடுதலின்றி உலகத்தார் விரும்புவர். இது பழைமையைக் கொண்டாடுவாரை உலகத்தார் தாமும் நட்பு ஆகுதற்கு விரும்புவர் என்றது.

Ketaaa Vazhivandha Kenmaiyaar Kenmai

Vitaaar Vizhaiyum Ulaku

Couplet

Friendship of old and faithful friends,Who ne'er forsake, the world commends

Translation

To love such friends the world desires Whose friendship has unbroken ties

Explanation

They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy

Comments (2)

Yuvraj  Ravel
Yuvraj Ravel
yuvraj  ravel verified

1 year ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Riya Balasubramanian
Riya Balasubramanian
riya balasubramanian verified

1 year ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்

பெண்நிறைந்த நீர்மை பெரிது.

Kanniraindha Kaarikaik Kaamperdhot Pedhaikkup

Penniraindha Neermai Peridhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.