திருக்குறள் 770: நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை — தலைமக்கள் இல்வழி இல்.

Thirukkural Verse 770

திருக்குறள் 770 — படை மாட்சி (The Excellence of an Army), பொருட்பால்.

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்.

கலைஞர் உரை

உறுதிவாய்ந்த வீரர்களை அதிகம் உடையதாக இருந்தாலும் தலைமை தாங்கும் தலைவர்கள் இல்லாவிட்டால் அந்தப் படை நிலைத்து நிற்க முடியாது

மு. வரதராசன் உரை

நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமைதாங்கும் தலைவர் இல்லாத போது படைக்குப் பெருமை இல்லையாகும்.

சாலமன் பாப்பையா உரை

சிறந்த வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்தப் படை போரில் நிலைத்து நிற்காது.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: நிலை மக்கள் சால உடைத்து எனினும் - போரின்கண் நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள் இல்வழித் தானை இல் - தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாதவழித் தானை நில்லாது. (படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின், காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார், 'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன் கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: படையானது நிலையுடைய வீரரைப் பெரிது உடைத்தாயினும் தனக்குத் தலைவரை இல்லாத விடத்துத் தனக்கு வெற்றியில்லையாம். இது படையமைத்தாலும் படைத்தலைவரையும் அமைக்க வேண்டுமென்றது.

Nilaimakkal Saala Utaiththeninum Thaanai

Thalaimakkal Ilvazhi Il

Couplet

Though men abound, all ready for the war,No army is where no fit leaders are

Translation

With troops in large numbers on rolls Army can't march missing gen'rals

Explanation

Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals

Comments (3)

Hridaan Batra
Hridaan Batra
hridaan batra verified

1 year ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

Yakshit Warrior
Yakshit Warrior
yakshit warrior verified

1 year ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Romil Johal
Romil Johal
romil johal verified

1 year ago

So much truth in this couplet. The poet captured an eternal value in just two lines.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்

வாடுதோட் பூசல் உரைத்து.

Paatu Perudhiyo Nenje Kotiyaarkken

Vaatudhot Poosal Uraiththu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.