Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Velandru Vendri Tharuvadhu Mannavan Koladhooung Kotaa Thenin | வேலன்று வென்றி தருவது மன்னவன் வேலன்று வென்றி தருவது மன்னவன் | Kural No - 546 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

உடல் எடையை குறைக்கும் கொள்ளு!!!

Updated on December 1, 2019January 4, 2023 by admin

கொள்ளுவில் மற்ற பருப்பு வகைகளை விட அயர்ன் சத்து அதிகமாக உள்ளது.இதனால் இது பெண்களுக்கு மாதவிடாய் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கின்றது.ஆனால் கொள்ளு உடலுக்கு சூடு தரும் என்பது உண்மையே…

கொள்ளு ஊற வைத்த நீரில் மிளகு சீரகம் சேர்த்து ரசம் வைத்து சாப்பிடுவது ருசியாகவும் உடலுக்கு நன்மையைத் தருகிறது.குழந்தைகளுக்கு சளி பிடித்து இருந்தால் கொள்ளு சூப் வைத்து கொடுத்தால் சரியாகிவிடும்.உணவில் அடிக்கடி கொள்ளு சேர்த்து வந்தால் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

கொள்ளுவை காயவைத்து பொடியாக அரைத்து சேமித்து வைத்தால் ரசம் வைக்கும் போது ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து பயன்படுத்தினால் ரசம் ருசியாக இருக்கும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் கொள்ளு துவையல், ரசம், குழம்பு போன்று அவ்வப்போது வைத்து உண்டு வந்தால் உடல் எடை குறையும் (Body
Weight Loss ).

புரதச் சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகை கொள்ளு. நமது உடல் ஆரோக்கியமாக வளர்வதற்கு தசைகளை முறையாக வேலை செய்ய வைக்கும் மற்றும் பழுதடைந்த திசுக்களை ஆரோக்கியமாகவும் இருக்க புரதம் மிக அவசியமாகும். இந்தப் புரதச்சத்து கொள்ளுவில் அதிகமாகவே உள்ளது.

பெரும்பாலும் உடல் பருமன் அதிகமாக இருப்பவர்களுக்கு ஊளைச் சதைகள் தான் அதிகமாக இருக்கும்.அந்த சதைகளை நீக்கி மிக வலுவான சதைகள் ஆக மாற்றுகிறது.

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிக்கு ஏற்ப கொள்ளில் உடல் எடையை குறைக்க மிகவும் பயன்படுகிறது.

Share this:

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Twitter

மேலே உள்ள திருக்குறள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்... Cancel reply

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme