சுவையான ருசியான காரசாரமான மட்டன் கறி – Mutton Curry Masala- ரெசிபியை வீட்டிலேயே மிகவும் எளிதாக எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தேவையானவை:
- மட்டன் (எலும்பில்லாதது) – அரை கிலோ,
- பொடியாக நறுக்கிய வெங்காயம்,
- பூண்டு (சேர்த்து) – ஒரு கப்,
- மட்டன் மசாலா – 3 டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
- இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், ‘
- பட்டை, கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை – தாளிக்க தேவையான அளவு,
- முந்திரிப் பருப்பு – 10,
- கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நன்கு சுத்தம் செய்யப்பட்ட மட்டனுடன் மஞ்சள்தூள் உப்பு மட்டன் மசாலா பின்பு அரைத்த இஞ்சி பூண்டு விழுது உடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப வேக வைத்துக் வேண்டும்.
நன்றாக வேக வைத்து பின்பு அதை ஆறவைத்து அதனை நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து கொண்டு அதில் எண்ணெய் ஊற்றி சிறிது நேரம் கழித்து பட்டை கிராம்பு சோம்பு பிரியாணி இலை பின்னர் முந்திரி பருப்பை சேர்க்கவும்.
இதனுடன் கறிவேப்பிலை பூண்டு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
பின்பு நறுக்கிய மட்டனை சேர்த்து அதனுடன் மட்டன் வேக வைத்த தண்ணீர் சிறிதளவு சேர்க்கவும்.
மிதமான சூட்டில் வைத்து நன்கு உதிரி உதிரியாக வரும் வரை கிளறி இறக்கவும். இதனுடன் கொத்த மல்லித் தழை சேர்த்து அலங்கரிக்கவும்.
இப்பொழுது சுவையான ஈசியான காரசாரமான மட்டன் கறி-Mutton Curry Masala- தயார். இதனுடன் கொத்த மல்லி இலை சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்…