செயற்கை சுவையூட்டிகள் நிறமூட்டிகள் போன்ற உடலுக்கு கேடு விளைவிக்கும் பொருட்கள் சேர்க்காமல் சுலபமான முறையில் ஆப்பிள் ஜாம்- Apple Jam Tamil – ரெசிபி.
தேவையானவை:
- ஆப்பிள் – 2,
- சர்க்கரை – 1கப்,
- லெமன் – 1/2 பழம்,
- தண்ணீர் – 1/2 கப்
செய்முறை:
ஆப்பிள் நன்றாக சுத்தம் செய்யப்பட்ட அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடாயை ஒன்று முதல் இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும் 5 முதல் 10 நிமிடம் வரை வேக வைத்து மசித்து பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு கப் ஆப்பிள் சாறுக்கு ஒரு கப் அளவு சர்க்கரையை சேர்த்துக் கொள்ளவும் தேவைப்பட்டால் அதற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள்.
வேகவைத்த ஜாமை சிறிதளவு எடுத்து தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் உள்ளதா என்று பதம் பார்க்கவும்.
அப்படி இல்லை என்றால் அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும்.
நன்றாக ஆற வைத்து அதனை காற்றுப் புகாத டப்பாக்களில் அடைத்துக்கொண்டால் இரண்டு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
இதனை -Apple Jam Tamil – காலை உணவாக சப்பாத்தி பிரட் சிறந்த சைட் டிஷ் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம்.
குறிப்பாக எலுமிச்சை சாறு சேர்த்து ஜாம் கெட்டுப் போகாமல் இருப்பதற்கு மட்டுமே எனவே சரியான அளவில் சேர்த்துக் கொள்ளவும்.
ஆப்பிளில் உள்ள நார்ச்சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளோனாய்டுகள் உடல் ஆரோக்கியத்திற்கும் கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். குழந்தைகளுக்கு சிறந்த உணவாக அமையும்….
ஊட்டச்சத்து தகவல்:
- பரிமாறும் அளவு – 1 டேபிள் ஸ்பூன் (15 கிராம்),
- கலோரிகள் – 32,
- கார்போஹைட்ரேட் – 8.1 கிராம்,
- நார்ச்சத்து – 0.2 கிராம்