நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத உணவுகளில் ஒன்றாக திகழ்கிறது பிராய்லர் கோழி ( Broiler Chicken ) .விலை மலிவாக கிடைக்கிறது என்பதால் அனைத்து தரப்பு மக்களும் அதனை பயன்படுத்துகின்றன. ஆனால் மரபணு மற்றும் ஊசிகள் மூலம் வளர்க்கப்படும் பிராய்லர் கோழி – Broiler Chicken – மனித உடலுக்கு பல விதமான தீங்குகளை தருகின்றன. நம் மனித உடலில் அனைத்து செயல்பாடுகளும் அதனை சார்ந்த ஹார்மோனை வைத்தே நடக்கின்றது. ஆனால் பிராய்லர் கோழியை உண்பதன் மூலம் அந்த ஹார்மோன்களுக்கு பாதிப்பு ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிராய்லர் கோழி எளிதில் வளர்வதற்காக அதற்கு 12 விதமான கெமிக்கல்களை பயன்படுத்தி உணவாக தருகின்றன. அந்தக் கோழிகள் அதனை உண்டு குறைந்த நாட்களில் நல்ல வளர்ச்சி மற்றும் எடை கூடியதாக வளருகின்றன.
பிராய்லர் கோழியை உண்பதன் மூலம் நமக்கு எந்தவித நன்மைகளும்உண்டாவதில்லை. அதற்கு மாற்றாக நம் எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. மஞ்சள் காமாலை, கல்லீரல் செயலிழப்பு என இதனால் ஏற்படும் நோய்களை பட்டியலிட்டுக் கொண்டே இருக்கலாம். முக்கியமாக இது ஆண்களின் விந்துக்களின் இருக்கும் உயிரணுக்களையும் அளிக்கிறது.
நாட்டுக் கோழியின் இறைச்சி மட்டும் முட்டையில் அதிக சத்துக்கள் இருக்கின்றன. வாரத்துக்கு இரு நாட்டுக்கோழி முட்டையை உண்டு வந்தால் ஆண்மை அதிகரிப்பதோடு இதயத்திற்கும் வலிமையை தருகின்றன.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை, நாட்கள் தள்ளிப் போவது மற்றும் இளம் வயதினிலேயே பெண்கள் வயதுக்கு வருவது போன்ற பெண்கள் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த பிராய்லர் கோழி காரணமாக அமைகிறது.
பலருக்கு முக்கிய பிரச்சனையாக இருக்கும் உடல் பருமனையும் இந்த பிராய்லர் கோழி உண்டாகிறது. எனவே உடலில் பல்வேறு ஹார்மோன்கள் மட்டும் உடலை கெடுக்கும் வகையில் உள்ள இந்த பிராய்லர் கோழியை ( Broiler Chicken ) தவிர்த்து நாட்டுக்கோழி கறி மற்றும் முட்டைகளை பயன்படுத்தி ஆண் பெண் என இருவருக்கும் உடல் நலத்தையும் காத்துக் கொள்ள வேண்டும்.
Leave a Reply