திருக்குறள் 124: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் — மலையினும் மாணப் பெரிது.
திருக்குறள் 124 — அடக்கம் உடைமை (The Possession of Self-restraint), அறத்துப்பால்.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
கலைஞர் உரை
உறுதியான உள்ளமும், அத்துடன் ஆர்ப்பாட்டமற்ற அடக்க உணர்வும் கொண்டவரின் உயர்வு, மலையைவிடச் சிறந்தது எனப் போற்றப்படும்
மு. வரதராசன் உரை
தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா உரை
தன் நேர்மையான வழியை விட்டு விலகாது, அடக்கத்துடன் வாழ்பவனைப் பற்றிய பிறர் மனத் தோற்றம் மலையைக் காட்டிலும் மிக உயரமானது.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - இல்வாழ்க்கையாகிய தன் நெறியின் வேறுபடாது நின்று அடங்கியவனது உயர்ச்சி, மலையினும் மாணப்பெரிது - மலையின் உயர்ச்சியினும் மிகப் பெரிது. (திரியாது அடங்குதல் - பொறிகளால் புலன்களை நுகராநின்றே அடங்குதல். 'மலை' ஆகுபெயர்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: தனது நிலையிற் கெடாதே யடங்கினவனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது. நிலை- வன்னாச்சிரம தன்மம்.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடங்கியவனுடைய உயர்ச்சியானது மலையின் உயர்ச்சியினைவிட மிகவும் பெரியதாகும்.
Nilaiyin Thiriyaadhu Atangiyaan Thotram
Malaiyinum Maanap Peridhu
Couplet
In his station, all unswerving, if man self subdue,Greater he than mountain proudly rising to the view
Translation
Firmly fixed in self serene The sage looks grander than mountain
Explanation
More lofty than a mountain will be the greatness of that man who without swerving from his domestic state, controls himself
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
Sitrinpam Veqki Aranalla Seyyaare
Matrinpam Ventu Pavar
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Anahi Aurora
1 year ago
Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.