மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை — எனைமாட்சித் தாயினும் இல். | குறள் எண் - 52

Thirukkural Verse 52

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை

எனைமாட்சித் தாயினும் இல்.

கலைஞர் உரை

நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்புக் கிடையாது

மு. வரதராசன் உரை

இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

சாலமன் பாப்பையா உரை

நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று. ('இல்' என்றார் பயன்படாமையின்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: இல்லறத்திற்கேற்ற சிறப்பு மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்இல் வாழ்க்கை செல்வம் முதலிய வேறு வகைகளில் எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் பயனுடையதில்லையாகும்.

Manaimaatchi Illaalkan Illaayin Vaazhkkai

Enaimaatchith Thaayinum Il

Couplet

If household excellence be wanting in the wife,Howe'er with splendour lived, all worthless is the life

Translation

Bright is home when wife is chaste If not all greatness is but waste

Explanation

If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing

Comments (2)

Saira Kaul
Saira Kaul
saira kaul verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Trisha Venkatesh
Trisha Venkatesh
trisha venkatesh verified

4 weeks ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்

வல்வரவு வாழ்வார்க் குரை.

Sellaamai Untel Enakkurai Matrunin

Valvaravu Vaazhvaark Kurai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.