z

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். | குறள் எண் - 365

atravar-enpaar-avaaatraar-matraiyaar-atraaka-atradhu-ilar-365

145

Thirukkural Tamil & English Definition

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

கலைஞர் உரை

"ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்"

மு. வரதராசன் உரை

"பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்."

சாலமன் பாப்பையா உரை

"ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்."

பாரி மேலகர் உரை

"பரிமேலழகர் உரை: அற்றவர் என்பார் அவா அற்றார் - பிறவியற்றவர் என்று சொல்லப்படுவார் அதற்கு நேரே ஏதுவாகிய அவா அற்றவர்கள், மற்றையார் அற்றாக அற்றது இலர் - பிற ஏதுக்களற்று அஃது ஒன்றும் அறாதவர்கள், அவற்றால் சில துன்பங்கள் அற்றதல்லது அவர்போற் பிறவி அற்றிலர். (இதனால் அவா அறுத்தாரது சிறப்பு விதிமுகத்தானும் எதிர்மறைமுகத்தானும் கூறப்பட்டது.). "

மணி குடவர் உரை

"மணக்குடவர் உரை: பற்றற்றவரென்பார் ஆசையற்றவரே; ஆசையறாதவர் பற்றினையறுத்தாராயினும் ஆசையற்றாரைப் போலப் பற்றறுதலிலர். "

வி முனுசாமி உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறவியற்றவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அதற்கு நேர்க்காரணமான அவா அற்றவர்களாவர். மற்ற எல்லாம் நீங்கி அது ஒன்று மட்டும் நீங்காதவர்கள் சில துன்பங்கள் அற்றவர்களேயல்லாமல் பிறவி அற்றவர்களாகார். "

Atravar Enpaar Avaaatraar Matraiyaar
Atraaka Atradhu Ilar

Couplet

Men freed from bonds of strong desire are free;None other share such perfect liberty

Translation

The free are those who desire not The rest not free in bonds are caught

Explanation

They are said to be free (from future birth) who are freed from desire; all others (who, whatever else they may be free from, are not freed from desire) are not thus free

145

Write Your Comment