தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். | குறள் எண் - 364

thoouymai-enpadhu-avaavinmai-matradhu-vaaaimai-venta-varum-364

76

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

"தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்"

கலைஞர் உரை

"தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்."

மு. வரதராசன் உரை

"மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: தூஉய்மை என்பது அவா இன்மை - ஒருவர்க்கு வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமை,அது வாஅய்மை வேண்ட வரும் - அவ்வவா இல்லாமைதான் மெய்ம்மையை வேண்டத் தானே உண்டாம். (வீடாவது: உயிர் அவிச்சை முதலிய மாசு நீங்குதல் ஆகலின்,அதனைத் 'தூய்மை' என்றும், காரணத்தைக் காரியமாக உபசரித்து, 'தூய்மை' என்பது அவா இன்மை என்றும் மெய்ம்மையுடைய பரத்தை ஆகுபெயரால் 'மெய்ம்மை' என்றும் கூறினார். 'மற்று' மேலையது போல வினைமாற்றின்கண் வந்தது. வேண்டுதல் - இடைவிடாது பாவித்தல். அவா அறுத்தல், வீட்டிற்குப் பரம்பரையான் அன்றி நேரே ஏது என்பதூஉம் அது வரும் வழியும் இதனால் கூறப்பட்டன.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: ஒருவர்க்கு அழுக்கறுத்தலாவது ஆசையின்மை; அவ்வாசை யின்மை மெய் சொல்லுதலை விரும்ப வரும். இது பொருள்மேலாசையில்லாதார் பொய் கூறாராதலின் மெய் சொல்ல அவாவின்மை வரும் என்று அவாவறுத்தற்குக் கருவி கூறிற்று. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவருக்குப் பேரின்ப வீடு என்று சொல்லப்படுவது அவா இல்லாமையே ஆகும். அது மெய்ம்மையை விரும்ப, தானே உண்டாவதாகும். "

வி முனுசாமி உரை

Thoouymai Enpadhu Avaavinmai Matradhu
Vaaaimai Venta Varum

Couplet

Desire's decease as purity men know;That, too, from yearning search for truth will grow

Translation

To nothing crave is purity That is the fruit of verity

Explanation

Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth

76

Write Your Comment