நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் — காமம் நுதுப்பேம் எனல். | குறள் எண் - 1148

Thirukkural Verse 1148

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்

காமம் நுதுப்பேம் எனல்.

கலைஞர் உரை

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வு அடங்குவது என்பது, எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைப்பதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும்

மு. வரதராசன் உரை

அலர் கூறுவதால் காமத்தை அடக்குவோம் என்று முயலுதல், நெய்யால் நெருப்பை அவிப்போம் என்று முயல்வதைப் போன்றது.

சாலமன் பாப்பையா உரை

இந்த ஊரார் தங்கள் அலரால் எங்கள் காதலை அழித்து விடுவோம் என்று எண்ணுவது, நெய்யை ஊற்றியே நெருப்பை அணைப்போம் என்பது போலாம்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கௌவையால் காமம் நுதுப்பேமெனல் - ஏதிலார் எடுக்கின்ற அலரால் நாம் காமத்தை அவித்தும் என்று கருதுதல்; நெய்யால் எரி நுதுப்பேம் என்றற்று - நெய்யால் எரியை அவித்தும் என்று கருதலோடு ஒக்கும். (மூன்றனுருபுகள் கருவிக்கண் வந்தன. கிளர்தற் காரணமாய அலரால் அவித்தல் கூடாது என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: எரிகின்ற நெருப்பை நெய்யினாலே அவிப்போமென்று நினைத்தாற்போலும்; அலரினானே காமத்தை அவிப்போமென்று நினைத்தல். இது தலைமகன் பின்னுங் களவொழுக்கம் வேண்டினமை கண்டு தோழி கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஊர்மக்கள் எடுக்கின்ற அலரால் காமத்தினை அவித்துவிடுவோம் என்று எண்ணுதல் நெய்யால் எரியை அவித்து விடுவோம் என்று எண்ணுதற்குச் சமமாகும்.

Neyyaal Erinudhuppem Endratraal Kelavaiyaal

Kaamam Nudhuppem Enal

Couplet

With butter-oil extinguish fire! 'Twill proveHarder by scandal to extinguish love

Translation

To quench the lust by rumour free Is to quench fire by pouring ghee

Explanation

To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee

Comments (1)

Azad Doshi
Azad Doshi
azad doshi verified

4 weeks ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்

இன்னா அறிவி னவர்.

Mikalmeval Meypporul Kaanaar Ikalmeval

Innaa Arivi Navar

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.