திருக்குறள் 1150: தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் — கெளவை எடுக்கும்இவ் வூர்.
திருக்குறள் 1150 — அலர் அறிவுறுத்தல் (The Announcement of the Rumour), காமத்துப்பால்.
தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.
கலைஞர் உரை
யாம் விரும்புகின்றவாறு ஊரார் அலர் தூற்றுகின்றனர்; காதலரும் விரும்பினால் அதை ஒப்புக் கொள்வார்
மு. வரதராசன் உரை
யாம் விரும்புகின்ற அலரை இவ்வூரார் எடுத்துக்கூறுகின்றனர், அதனால் இனிமேல் காதலர் விரும்பினால் விரும்பியவாறு அதனை உதவுவார்.
சாலமன் பாப்பையா உரை
நான் விரும்பிய அவரைப் பற்றித்தான் இவ்வூர் பேசுகிறது. இனி என் காதலரும் நான் விரும்பியபோது என்னைத் திருமணம் செய்வார்.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: (தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் அலரறிவுறீஇ அவன் உடன்போக்கு நயப்பச் சொல்லியது.) யாம் வேண்டும் கௌவை இவ்வூர் எடுக்கும் - உடன் போகற்கு ஏதுவாகல் நோக்கி யாம் பண்டே விரும்புவதாய அலரை இவ்வூர்தானே எடாநின்றது; காதலர் தாம் வேண்டின் நல்குவர் - இனிக் காதலர் தாமும் யாம் வேண்டியக்கால் அதனை இனிதின் நேர்வர், அதனால் இவ்வலர் நமக்கு நன்றாய் வந்தது. (எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. 'நம்கண் காதல் உடைமையின் மறார்' என்பது தோன்றக் 'காதலர்' என்றாள். இவ்விருபது பாட்டும் புணர்தல் நிமித்தம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: யாம் விரும்ப, அலரையும் இவ்வூரார் எடுத்தார். ஆதலான் இனித் தாங்களே விரும்பிக் கொடுப்பர் நமது காதலார்க்கு.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: உடன் போவதற்குக் காரணமாக அலரை இவ்வூர்தானே எடுக்கின்றது. இனிக் காதலர் தாமும் யாம் விரும்பியபடியே செய்வர்: அதனால் இந்த அலர் நமக்கு நன்மையாய் வந்தது.
Thaamventin Nalkuvar Kaadhalar Yaamventum
Kelavai Etukkumiv Voor
Couplet
If we desire, who loves will grant what we require;This town sends forth the rumour we desire
Translation
Town raising this cry, I desire Consent is easy from my sire
Explanation
The rumour I desire is raised by the town (itself); and my lover would if desired consent (to my following him)
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.
Thuppura Villaar Thuvarath Thuravaamai
Uppirkum Kaatikkum Kootru
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.