திருக்குறள் 1213: நனவினால் நல்கா தவரைக் கனவினால் — காண்டலின் உண்டென் உயிர்.
திருக்குறள் 1213 — கனவுநிலை உரைத்தல் (The Visions of the Night), காமத்துப்பால்.
நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.
கலைஞர் உரை
நனவில் வந்து அன்பு காட்டாதவரைக் கனவிலாவது காண்பதால்தான் இன்னும் என்னுயிர் நிலைத்திருக்கிறது
மு. வரதராசன் உரை
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
சாலமன் பாப்பையா உரை
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.
பரிமேலழகர் உரை
பரிமேலழகர் உரை: (ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.).
மணக்குடவர் உரை
மணக்குடவர் உரை: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும். இது கண்டாற் பயனென்னை? காம நுாகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
வீ. முனிசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நனவில் வந்து அன்பு செய்யாதிருக்கும் கணவரை யான் கனவில் கண்ட காட்சியாலே என்னுடைய உயிர் இருந்து வருகின்றது.
Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal
Kaantalin Unten Uyir
Couplet
Him, who in waking hour no kindness shows,In dreams I see; and so my lifetime goes
Translation
In wakeful hours who sees me not I meet in dreams and linger yet
Explanation
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.
Kalandhunarththum Kaadhalark Kantaar Pulandhunaraai
Poikkaaivu Kaaidhien Nenju
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Kashvi Gera
1 year ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.