திருக்குறள் 1242: காதல் அவரிலர் ஆகநீ நோவது — பேதைமை வாழியென் நெஞ்சு.

Thirukkural Verse 1242

திருக்குறள் 1242 — நெஞ்சொடு கிளத்தல் (Soliloquy), காமத்துப்பால்.

காதல் அவரிலர் ஆகநீ நோவது

பேதைமை வாழியென் நெஞ்சு.

கலைஞர் உரை

அவர் நமது காதலை மதித்து நம்மிடம் வராத போது, நெஞ்சே! நீ மட்டும் அவரை நினைத்து வருந்துவது அறியாமையாகும்; நீ வாழ்க

மு. வரதராசன் உரை

என் நெஞ்சே! வாழ்க! அவர் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரை நினைந்து வருந்துவது உன் அறியாமையே!

சாலமன் பாப்பையா உரை

என் நெஞ்சே நீ வாழ்ந்து போ; அவர் நம்மீது அன்பு இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவர் வரவை எண்ணி வருந்துவது மூடத்தனமே.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (தலைமகனைக் காண்டற்கண் வேட்கை மிகுதியால் சொல்லியது.) என் நெஞ்சு வாழி - என் நெஞ்சே, வாழ்வாயாக; அவர் காதல் இலராக நீ நோவது - அவர் நம்கண் காதல் இலராகவும் நீ அவர் வரவு நோக்கி வருந்துதற்கு ஏது; பேதைமை - நின் பேதைமையே, பிறிதில்லை. ('நம்மை நினையாமையின், நங்கண் காதல் இலர் என்பதுஅறியலாம், அஃதறியாமை மேலும் அவர்பால் செல்லக் கருதாது அவர் வரவு பார்த்து வருந்தா நின்றாய், இது நீ செய்துகொள்கின்றது' என்னும் கருத்தால் 'பேதைமை' என்றாள். 'வாழி' இகழ்ச்சிக் குறிப்பு, 'யாம் அவர்பால் சேறலே அறிவாவது' என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: அவர் நம்மேற் காதலிலராக, என் நெஞ்சே! நீ கூட்டத்தைக் கருதி வருந்துகின்றது பேதைமை. இஃது அன்பிலார்மாட்டு வருந்தினாலும் பயனில்லை யென்றது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: என்னுடைய நெஞ்சமே! நம்முடைய கணவர் நம்மிடத்தில் காதல் கொள்ளாமல் இருக்கின்றார். நீ அவர் வரவு நோக்கி வருந்துகின்றாய்; இது உன்னுடைய போதைமையேயாகும்.

Kaadhal Avarilar Aakanee Novadhu

Pedhaimai Vaazhiyen Nenju

Couplet

Since he loves not, thy smartIs folly, fare thee well my heart

Translation

Bless O mind! you pine in vain For me he has no love serene

Explanation

Is folly, fare thee well my heart!

Comments (2)

Taimur Chaudhari
Taimur Chaudhari
taimur chaudhari verified

1 year ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

Eshani Hayer
Eshani Hayer
eshani hayer verified

1 year ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்

அவாவுண்டேல் உண்டாம் சிறிது.

Achchame Keezhkaladhu Aasaaram Echcham

Avaavuntel Untaam Siridhu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.