திருக்குறள் 1204: யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து — ஓஒ உளரே அவர்.

Thirukkural Verse 1204

திருக்குறள் 1204 — நினைந்தவர் புலம்பல் (Sad Memories), காமத்துப்பால்.

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர்.

கலைஞர் உரை

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

மு. வரதராசன் உரை

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

சாலமன் பாப்பையா உரை

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) எம் நெஞ்சத்து அவர் ஓ உளரே - எம்முடைய நெஞ்சத்து அவர் எப்பொழும் உளரேயாய் இராநின்றார்; அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல் - அவ்வகையே அவருடைய நெஞ்சத்தும் யாமும் உளமாதுமோ, ஆகேமோ? (ஓகார இடைச்சொல் ஈண்டு இடைவிடாமை உணர்த்தி நின்றது. 'உளமாயும், வினை முடியாமையின் வாராராயினாரோ, அது முடிந்தும் இலமாகலின் வாராராயினாரோ?' என்பது கருத்து.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: அவர் நெஞ்சத்து யாமும் உளேங்கொல்லோ: எம்முடைய நெஞ்சின்கண் எப்பொழுதும் அவர் உளராகா நின்றார். ஓஒ என்பது மிகுதிப்பொருளின்கண் வந்ததாதலான், எப்பொழுதும் என்னும் பொருளதாயிற்று.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எம்முடைய நெஞ்சத்தில் காதலர் எப்போதும் இருந்து கொண்டே இருக்கின்றார். அதுபோலவே அவருடைய நெஞ்சத்தில் நாமும் இருந்துகொண்டு இருக்கிறோமோ?.

Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu

Oo Ulare Avar

Couplet

Have I a place within his heart!From mine, alas! he never doth depart

Translation

Have I a place within his heart? Ah from mine he will never depart

Explanation

He continues to abide in my soul, do I likewise abide in his ?

Comments (1)

Armaan Handa
Armaan Handa
armaan handa verified

1 year ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை

மாயும்என் மாயா உயிர்.

Porulmaalai Yaalarai Ulli Marulmaalai

Maayumen Maayaa Uyir

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.