தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் — எம்நெஞ்சத்து ஓவா வரல். | குறள் எண் - 1205

Thirukkural Verse 1205

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்

எம்நெஞ்சத்து ஓவா வரல்.

கலைஞர் உரை

அவருடைய நெஞ்சில் எமக்கு இடம் தராமல் இருப்பவர்; எம் நெஞ்சில் மட்டும் இடைவிடாமல் வந்து புகுந்து கொள்வதற்காக வெட்கப்படமாட்டார் போலும்

மு. வரதராசன் உரை

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ?

சாலமன் பாப்பையா உரை

தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ?

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் - தம்முடைய நெஞ்சின்கண்ணே யாம் செல்லாமல் எம்மைக் காவல் கொண்ட காதலர்; எம் நெஞ்சத்து ஓவா வரல் நாணார்கொல் - தாம் எம்முடைய நெஞ்சின்கண் ஒழியாது வருதலை நாணார்கொல்லோ? (ஒருவரைத் தம்கண் வருதற்கு ஒருகாலும் உடம்படாது, தாம் அவர்கண் பலகாலுஞ்சேறல் நாணுடையார் செயலன்மையின், 'நாணார்கொல்' என்றாள்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: தமது நெஞ்சின்கண் எம்மை யாம் சொல்லாமல் காவல்கொண்டார் எமது நெஞ்சின்கண் ஒழியாதே வருதலைக் காணாரோ. இது நினையாரோ நினைப்பாரோ என்று ஐயப்பட்ட தலைமகள் நினையாரென்று தெளிந்து கூறியது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: காதலராகிய அவருடைய மனதில் யாம் இருக்கக் கூடாதென்று காவல் செய்கின்ற அவர் எம்முடைய நெஞ்சத்திற்குத் தவறாமல் வருவதற்கு வெட்கப்பட மாட்டாரோ?.

Thamnenjaththu Emmaik Katikontaar Naanaarkol

Emnenjaththu Ovaa Varal

Couplet

Me from his heart he jealously excludes:Hath he no shame who ceaseless on my heart intrudes

Translation

Shame! My heart often he enters Banning me entry into his

Explanation

He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine

Comments (3)

Miraan Gulati
Miraan Gulati
miraan gulati verified

1 month ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

Mamooty Wadhwa
Mamooty Wadhwa
mamooty wadhwa verified

1 month ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Prerak Biswas
Prerak Biswas
prerak biswas verified

1 month ago

I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து.

Kaamamum Naanum Uyirkaavaath Thoongumen

Nonaa Utampin Akaththu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.