பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். | குறள் எண் - 1188

pasandhaal-ivalenpadhu-allaal-ivalaith-thurandhaar-avarenpaar-il-1188

31

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

"இவள் உடலில் பசலை நிறம் படர்ந்தது எனப் பழித்துக் கூறுகிறார்களே அல்லாமல், இதற்குக் காரணம், காதலன் பிரிந்து சென்றிருப்பது தான் என்று சொல்பவர் இல்லையே"

கலைஞர் உரை

"இவள் பிரிவால் வருத்திப் பசலை நிறம் அடைந்தாள் என்ற பழி சொல்வதே அல்லாமல், இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார் என்று சொல்பவர் இல்லையே!"

மு. வரதராசன் உரை

"இங்கோ இவள் பசலை உற்றாள் என்று சொல்கிறார்களே தவிர, இந்தப் பெண்ணை விட்டுவிட்டு அவர் போய்விட்டாரே என்று சொல்பவர் ஒருவரும் இல்லை."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: ('நீ இங்ஙனம் பசக்கற்பாலையல்லை' என்ற தோழியோடு புலந்து சொல்லியது.) இவள் பசந்தாள் என்பது அல்லால் - இவள் ஆற்றியிராது பசந்தாள் என்று என்னைப் பழி கூறுவதல்லது; இவளை அவர் துறந்தார் என்பார் இல் - இவளை அவர் துறந்து போயினார் என்று அவரைக் கூறுவார் ஒருவருமில்லை. ('என்பார்' என வேறுபடுத்துக் கூறினாள், தன்னையே நெருங்குதல் பற்றிப் புலக்கின்றமையின்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: இவள் பசந்தாளென்று எனக்குக் குற்றம் நாடுமதல்லது, இவளைத் துறந்தார் அவரென்று அவரது கொடுமையைச் சொல்லுவார் இல்லை. இஃது இப்பசப்பு வரலாகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: இவள் பொறுத்திருக்க முடியாமல் பசப்பு நிறம் அடைந்துவிட்டார் என்று என்னைப் பழிகூறுவதல்லாமல், இந்த நாயகியை அவர்விட்டுப்போய் விட்டார் என்று அவரைக் குறைகூறுவார் ஒருவரும் இல்லை. "

வி முனுசாமி உரை

Pasandhaal Ivalenpadhu Allaal Ivalaith
Thurandhaar Avarenpaar Il

Couplet

On me, because I pine, they cast a slur;But no one says, 'He first deserted her.'

Translation

On my pallor they cast a slur But none says \"lo he parted her\"

Explanation

Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her"

31

Write Your Comment