படர்மெலிந் திரங்கல்

Complainings

படர்மெலிந் திரங்கல் (Complainings) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 1161–1170.

திருக்குறள் 1161: மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு

ஊற்றுநீர் போல மிகும்.

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it

திருக்குறள் 1162: கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு

உரைத்தலும் நாணுத் தரும்.

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it

திருக்குறள் 1163: காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து.

(Both) lust and shame, with my soul for their shoulder pole balance themselves on a body that cannot bear them

திருக்குறள் 1164: காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்

ஏமப் புணைமன்னும் இல்.

There is indeed a flood of lust; but there is no raft of safety to cross it with

திருக்குறள் 1165: துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு

நட்பினுள் ஆற்று பவர்.

What will they prove when angry tempests lower?

திருக்குறள் 1166: இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்

துன்பம் அதனிற் பெரிது.

The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater

திருக்குறள் 1167: காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்

யாமத்தும் யானே உளேன்.

I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live

திருக்குறள் 1168: மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை.

The night which graciously lulls to sleep all living creatures, has me alone for her companion

திருக்குறள் 1169: கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா.

The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me

திருக்குறள் 1170: உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்

நீந்தல மன்னோஎன் கண்.

Could mine eyes travel like my thoughts to the abode (of my absent lord), they would not swim in this flood of tears

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்

பொருளல்லது அவ்வூன் தினல்.

Arulalladhu Yaadhenin Kollaamai Koral

Porulalladhu Avvoon Thinal

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.