திருக்குறள் 1169: கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் — நெடிய கழியும் இரா.

Thirukkural Verse 1169

திருக்குறள் 1169 — படர்மெலிந் திரங்கல் (Complainings), காமத்துப்பால்.

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்

நெடிய கழியும் இரா.

கலைஞர் உரை

இந்த இரவுகள் நீண்டுகொண்டே போவதுபோல் தோன்றும் கொடுமை இருக்கிறதே அது காதலரின் பிரிவால் ஏற்படும் கொடுமையைவிடப் பெரிதாக உள்ளது

மு. வரதராசன் உரை

( பிரிந்து துன்புறுகின்ற) இந்நாட்களில் நெடுநேரம் உடையனவாய்க் கழிகின்ற இராக்காலங்கள், பிரிந்த கொடியவரின் கொடுமையை விடத் தாம் கொடியவை.

சாலமன் பாப்பையா உரை

இப்போதெல்லாம் இரவுகள் கழிவதற்கு நெடும்பொழுது ஆகிறது; என்னைப் பிரிந்து போன என் கணவரின் கொடுமையிலும் இவை மிகக் கொடுமையாக இருக்கின்றன.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) இந்நாள் நெடிய கழியும் இரா - காதலரோடு நாம் இன்புற்ற முன்னாள்களிற் குறியவாய், அவர் பிரிவாற்றேமாகின்ற இந்நாள்களிலே நெடியவாய்ச் செல்கின்ற கங்குல்கள்; கொடியார் கொடுமையின் தாம் கொடிய - அக்கொடியாரது கொடுமைக்கு மேலே தாம் கொடுமை செய்யாநின்றன. (தன்னாற்றாமை கருதாது பிரிதலின், 'கொடியார்' என்றாள். கொடுமை: கடிதின் வாராது நீட்டித்தல். அவர் பிரிவானும் நீட்டிப்பானும் உளதாய ஆற்றாமைக்குக் கண்ணோடாமை மேலும் பண்டையின் நெடியவாய்க் கொடியவாகாநின்றன என்பதாம்.)

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: கொடியவர் செய்த கொடுமையினும் தாம் கொடியனவாய் நின்றன: இக்காலத்து நெடியவாய்க் கழிகின்ற இராப்பொழுதுகள். இது பொழுது விடிகின்றதில்லை யென்று தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

வீ. முனிசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தலைவன் பிரிந்திருக்கும் இந்நாட்களில் இரவுப் பொழுதுகள் நெடியவாய்க் கழிகின்றன; தலைவன் செய்கின்ற கொடுமைகளைவிடக் கொடுமை செய்கின்றன.

Kotiyaar Kotumaiyin Thaamkotiya Innaal

Netiya Kazhiyum Iraa

Couplet

More cruel than the cruelty of him, the cruel one,In these sad times are lengthening hours of night I watch alone

Translation

Crueller than that cruel he Are midnight hours gliding slowly

Explanation

The long nights of these days are far more cruel than the heartless one who is torturing me

Comments (1)

Lakshit Yogi
Lakshit Yogi
lakshit yogi verified

1 year ago

This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

Mannuyir Ompi Arulaalvaarkku Illenpa

Thannuyir Anjum Vinai

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.