உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் — பொய்த்தல் அறிந்தென் புலந்து. | குறள் எண் - 1287

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
கலைஞர் உரை
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?
மு. வரதராசன் உரை
வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓட் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் ன்னெ?
சாலமன் பாப்பையா உரை
தன்னை இழுத்துக் கொண்டு போகும் என்று தெரிந்தும், ஓடும் வெள்ளத்துள் பாய்பவர் செயலைப் போல, என் சினம் பலன் அளிக்காது என்று தெரிந்தும் அவருடன் ஊடல் கொண்டு ஆவது என்ன?
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்? ('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?. இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தம்மை இழுத்துக் கொண்டு போவதை யறிந்தும் தண்ணீரில் பாய்பவர்போலப் பிணங்குவதில் பயனில்லை என்பதை அறிந்திருந்தும் கணவரோடு பிணங்கிப் பெறுவது என்ன?.
Uyththal Arindhu Punalpaai Pavarepol
Poiththal Arindhen Pulandhu
Couplet
As those of rescue sure, who plunge into the stream,So did I anger feign, though it must falsehood seem
Translation
To leap in stream which carries off When lord is close to feign a huff
Explanation
Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long?
Comments (4)

Kanav Gaba
4 weeks ago
This Kural offers profound wisdom about life. It truly reflects the values we should carry every day. It's amazing how relevant this remains even in modern times.

Tara Gole
4 weeks ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Samaira Boase
4 weeks ago
What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.
Mikudhiyaan Mikkavai Seydhaaraith Thaandham
Thakudhiyaan Vendru Vital
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Abram Sehgal
4 weeks ago
What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.