அமைச்சு

The Office of Minister of state

அமைச்சு (The Office of Minister of state) என்ற திருக்குறள் அதிகாரம்த்தில் குறள் 631–640.

திருக்குறள் 631: கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

அருவினையும் மாண்டது அமைச்சு.

The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself)

திருக்குறள் 632: வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.

The minister is one who in addition to the aforesaid five things excels in the possession of firmness,

திருக்குறள் 633: பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்

பொருத்தலும் வல்ல தமைச்சு.

The minister is one who can effect discord (among foes), maintain the good-will of his friends and restore to friendship those who have seceded (from him)

திருக்குறள் 634: தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்

சொல்லலும் வல்லது அமைச்சு.

The minister is one who is able to comprehend (the whole nature of an undertaking), execute it in the best manner possible, and offer assuring advice (in time o...

திருக்குறள் 635: அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்

திறனறிந்தான் தேர்ச்சித் துணை.

He is the best helper (of the king) who understanding the duties, of the latter, is by his special learning, able to tender the fullest advice, and at all times...

திருக்குறள் 636: மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்

யாவுள முன்நிற் பவை.

What (contrivances) are there so acute as to resist those who possess natural acuteness in addition to learning ?

திருக்குறள் 637: செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை அறிந்து செயல்.

Though you are acquainted with the (theoretical) methods (of performing an act), understand the ways of the world and act accordingly

திருக்குறள் 638: அறிகொன்று அறியான் எனினும் உறுதி

உழையிருந்தான் கூறல் கடன்.

Although the king be utterly ignorant, it is the duty of the minister to give (him) sound advice

திருக்குறள் 639: பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்

எழுபது கோடி உறும்.

Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin

திருக்குறள் 640: முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்

திறப்பாடு இலாஅ தவர்.

Those ministers who are destitute of (executive) ability will fail to carry out their projects, although they may have contrived aright

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண் டற்பாற் றன்று.

Virundhu Puraththadhaath Thaanuntal Saavaa

Marundheninum Ventarpaar Randru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.