திருக்குறள் 418: கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் — தோட்கப் படாத செவி.

Thirukkural Verse 418

திருக்குறள் 418 — கேள்வி (Hearing), பொருட்பால்.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்

தோட்கப் படாத செவி.

கலைஞர் உரை

இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்

மு. வரதராசன் உரை

கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.

சாலமன் பாப்பையா உரை

கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.

பரிமேலழகர் உரை

பரிமேலழகர் உரை: கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம் தன்மையவேயாம், கேள்வியால் தோட்கப்படாத செவி - கேள்வியால் துளைக்கப்படாத செவிகள். (ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய' என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார். 'பழைய துளை துளையன்று' என்பதாம்.).

மணக்குடவர் உரை

மணக்குடவர் உரை: ஓசை மாத்திரம் கேட்டனவாயினும் அதுவுங் கேளாத செவி போலும்; நல்லோர் கூறுஞ் சொற்களால் துளைக்கப்படாத செவி. இது கேள்வியில்லாதார் செவிட ரென்றது.

Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal

Thotkap Pataadha Sevi

Couplet

Where teaching hath not oped the learner's ear,The man may listen, but he scarce can hear

Translation

That ear though hearing is dulled Which is not by wisdom drilled

Explanation

The ear which has not been bored by instruction, although it hears, is deaf

Comments (3)

Nayantara Ahluwalia
Nayantara Ahluwalia
nayantara ahluwalia verified

1 year ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Aarav Dugar
Aarav Dugar
aarav dugar verified

1 year ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Divyansh Saini
Divyansh Saini
divyansh saini verified

1 year ago

What a beautiful thought! The poet's ability to express deep meaning in few words is just remarkable.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்

வினையாண்மை வீறெய்த லின்று.

Manaiyaalai Anjum Marumaiyi Laalan

Vinaiyaanmai Veereydha Lindru

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.